பறக்கும்போது கோளாறு: மீண்டும் சென்னை திரும்பிய லண்டன் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகமீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
இன்று காலை 8.20 மணிக்கு 321 பயணிகளுடன் அந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்இருந்து புறப்பட்டது. ஆனால், வானில் பறந்து கொண்டிருந்தபோதே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மீனம்பாக்கம விமான நிலையத்துக்குத் திரும்பியது. 8.30 மணிக்கு அந்தவிமானம் தரையிறங்கியது.
இதையடுத்து விமான நிலையப் பொறியாளர்கள் அந்த கோளாறை சரி செய்தனர். இதையடுத்து 9.30 மணிக்குஅந்த விமானம் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications