பாண்டிச்சேரியில் பீர் "பப்"கள்: அதிமுக எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
"மப்பு"க்குப் பெயர் போன பாண்டிச்சேரியில் விரைவில் பீர் "பப்"கள் துவங்கப்படவுள்ளன. இதற்கு அதிமுக கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த "பப்"களில் பீர் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதற்கு "குடி மக்களிடையே" நல்ல வரவேற்பும், ஆர்வம்எழுந்துள்ள நிலையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெவித்துள்ளது.
இதுகுறித்து பாண்டிச்சேரி அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான அன்பழகன் கூறுகையில், "பப்" கலாச்சாரத்தால்பள்ளி, கல்லூரி மாணவர்கள் கெட்டுப் போவார்கள்.
மேலும், இந்த பப்களால் அரசுக்கு பெரிய அளவில் வருவாயும் கிடைக்ப் போவதில்லை. எனவே இந்த"பப்"களுக்கு அனுமதி கொடுக்கும் முடிவை ஆளும் காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications