மீண்டும் திமுக தலைவராகிறார் கருணாநிதி: துணை பொது செயலாளராகிறார் துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகனை நிறுத்த கட்சி மேலிடம் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தப் பதவியை ஸ்டாலினுக்கு வழங்க பல முனைகளிலும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும்துரைமுருகனுக்கே இந்தப் பொறுப்பை வழங்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக உட்கட்சித் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.

தலைவர் பதவிக்கு கருணாநிதி சார்பிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன் சார்பிலும், பொருளாளர்பதவிக்கு ஆற்காடு வீராசாமி சார்பிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலையுடன் இந்தமனுத் தாக்கல் முடிந்துவிட்டது.

இறுதியில் இந்த 3 பேரின் பெயர்கள் மட்டுமே போட்டியில் உள்ளன. எனவே இவர்கள் 3 பேரும் போட்டியின்றித்தேர்வு செய்யப்படவுள்ளனர். நாளை சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில்அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்படும்.

அதே போல தணிக்கைக் குழு உறுப்பினர்களாக எஸ்.ஏ.எம்.உசேன், குழந்தைத் தமிழரசன், காசிநாதன்,பி.வி.கல்யாணசுந்தரம் ஆகியோரே மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதற்கிடையே, 3 துணைப் பொதுச் செயலாளர் பதவிகளுக்கான நியமனத்தை திமுக தலைவர் கருணாநிதி நாளைஅறிவிக்கவுள்ளார். ஏறகேனவே துணைப் பொதுச் செயலாளர்களகல உள்ள இருவர் தவிர மூன்றாவது துணைப்பொதுச் செயலாளராக துரைமுருகனை கருணாநிதி நியமிப்பார் என்று தெரிகிறது.

நாஞ்சில் மனோகரனின் மறைவு காரணமாக இந்தப் பதவி காலியானது. இதுவரை காலியாகவேவைக்கப்பட்டிருந்த இந்தப் பதவிக்கு ஸ்டாலினை நிறுத்தலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கட்சியில் இப்போது நிலவும் உட்கட்சிப் பூசல் காரணமாக அதைத் தவிர்த்துவிட்டு பிரச்சனையல்லாததுரைமுருகனையே துணைப் பொதுச் செயலாளராக்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

வேலூர் மாவட்டம் மேல்மயிலம் என்ற ஊரைச் சேர்ந்த துரைருகன், கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார். 6-வது முறையாக எம்.எல்.ஏவாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.தற்போது சட்டசபை திமுக துணைத் தலைவராக உள்ளார். மிகத் தீவிரமான கருணாநிதி விசுவாசி.தொண்டர்களோடு நெருங்கிப் பழகுபவர். நகைச்சுவை உணர்வும், பேச்சுத் திறனும் பெற்றவர்.

ஸ்டாலின், அழகிரி என அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர் இவர். கருணாநிதிக்கு ஏதாவது பிரச்சனைஎன்றால் அவரது குடும்பத்தினர் முதலில் அழைக்கும் நபர் துரைமுருகன் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+