கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை இடிக்க அரசு முயற்சி?
சென்னை:
மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் ஒருபகுதி இடிக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டுமாறு மாநகராட்சிஅதிகாரிகளுக்கும் பொதுப்பணித்துறைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
1967ம் ஆண்டில் கோபாலபுரத்தில் வீட்டைக் கட்டிய கருணாநிதி, தனது வீட்டு மனைக்கு பின் புறம் இருந்தமாநகராட்சிக்குச் சொந்தமான 780 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாகவும், அந்த இடத்தையும் தனதுமனையுடன் சேர்த்து வீட்டைக் கட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் 1970களிலேயே கிளப்பப்பட்டது. இதையடுத்து அந்த ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு அபராதம்கட்டினார் கருணாநிதி. ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு அந்த அபராதத்தைத் திரும்பப் பெற்றுவிட்டகருணாநிதி நிலத்தை மட்டும் மாநகராட்சிக்குத் திருப்பித் தரவே இல்லை என்கிறது அதிமுக வட்டாரம்.
இதையடுத்துத் தான் அந்த நிலத்தை மீட்குமாறு துணை மேயர் கராத்தே தியாகராஜனை விட்டு மாநகராட்சியில்அதிமுக தலைமை தீர்மானம் போட வைத்ததாகவும் கூறப்படுகிறது. மாநகராட்சியின் இந்தத் தீர்மானத்தை வைத்துகருணாநிதியின் வீட்டின் பின் பகுதியை இடிக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கட்டியுள்ள புதுவீட்டை அவரது மனைவி தயாளு அம்மாளின் குடும்பத்தினருக்கு கருணாநிதி காட்டினார்.
இது தெரிந்து நிருபர்களும் அங்கு கூடிவிட்டனர். இதையடுத்து நிருபர்களும் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இந்த வீட்டுக்கு மின்சார இணைப்பு தராமல் சென்னை மாநகராட்சிதாமதம் செய்து வருகிறது. இது இந்த ஆட்சியாளர்களின் இயல்பு தான். இதை சட்டப்பூர்வமாக சந்திக்கப்போகிறேன்.
மேலும் கோபாலபுரம் வீட்டுப் பிரச்சனை 1969ல் நடந்தது. இப்போது அதைக் கிளப்புவது ஆட்சியாளர்களின்பெருந்தன்மையைத் தான் காட்டுகிறது. அந்த வீட்டை வேண்டுமானால் இடித்துக் கொள்ளட்டும் என்றார்கருணாநிதி.
கோபலபுரம் வீட்டில் தான் தயாளு அம்மையார் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கருணாநிதியும் இங்குதான் தங்கியுள்ளார். அதே நேரம் தினமும் துணைவியார் ராஜாத்தி அம்மாள் இல்லத்துக்கும் மதிய உணவுக்குப்போய் வருவார் கருணாநிதி.
இதுவரை ஆலிவர் ரோட்டில் ராஜாத்தி அம்மாள் வசித்து வந்தார். இப்போது அந்த வீடு விற்கப்பட்டுவிட்டது.அதற்குப் பதிலாகத் தான் ஆழ்வார்ப்பேட்டை சி.ஐ.டி. காலனியில் புது வீடு கட்டிள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications