கோவையில் வீட்டில் குண்டுவெடிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை காளப்பட்டி பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளப்பட்டி, நேரு நகர் பகுதியில் சிலகட்டுமானத் தொழிலாளர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இன்று திடீரென்று ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில்வீட்டின் கூரை சரிந்து விழுந்தது.
குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வீட்டில் குண்டு வந்தது எப்படி என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications