திமுகவின் துணை பொது செயலாளராக ஸ்டாலின் நியமனம்: தலைவராக கருணாநிதி மீண்டும் தேர்வு
சென்னை:
திமுகவின் தலைவராக கருணாநிதி 9 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். அதே போல கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக உட்கட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்குகட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர், வட்ட, ஒன்றியச் செயலாளர் உள்பட 1,186பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மத்தியதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக புதிய தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடந்தது. புதியதலைவராக மு.கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படுவது இது 9-வதுமுறையாகும். அதேபோல பொதுச் செயலாளர் பதவிக்கு க.அன்பழகனும், பொருளாளராக ஆற்காடு வீராசாமியும்போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து கருணாநிதி எழுந்து நின்று தனது நன்றியைத் தெரிவித்தார். உடனே அங்கிருந்த திமுக மாநிலநிர்வாகிகள் அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின்னர் புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் பெயர்களை கருணாநிதி அறிவித்தார். கட்சி விதிப்படி, 3துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராகவும், ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும்.
பல விதங்களிலும் நெருக்கடி கொடுத்து தான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஸ்டாலின் பெற்றுள்ளார்.மேலும் தனது தீவிர ஆதரவாளரான பரிதி இளம்வழுதியையும் துணைப் பொதுச் செயலாளராக்கிவிட்டார்ஸ்டாலின்.
முதலில் இப் பதவிக்கு ஸ்டாலினை நியமிக்கவே கருணாநிதி திட்டமிட்டிருந்தார். ஆனால், அழகிரி தரப்பில் இருந்துஎதிர்ப்பு கிளம்பியதால் துரைமுருகனை துணைப் பொதுச் செயலாளராக்க முடிவு செய்தார்.
மேலும் இப்போது அழகிரி சிறையில் இருக்கும் நிலையில் ஸ்டாலினுக்கு இந்தப் பதவியைத் தந்தால் கட்சியில்கோஷ்டிப் பூசல் மேலும் வலுவடையும் என கருணாநிதி நினைத்தார். இதனால் அதைத் தவிர்க்கவே விரும்பினார்.
ஆனால், தனக்கு இந்தப் பதவி வேண்டும் என்பதில் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக கருணாநிதிக்கு கடும்நெருக்கடி தந்தார். இப்போது அழகிரி உள்ளே இருக்கும் நிலையில் ஸ்டாலினை கட்சியின் முக்கியப் பதவிக்குக்கொண்டு வர இதுவே சரியான தருணம் என அவரது ஆதரவாளரான பொன்முடியும் கருணாநிதியை நெருக்கினார்.
மேலும் துரைமுருகனும் கூட ஸ்டாலினுக்கே அந்தப் பதவியைத் தருமாறு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.இதையடுத்து அன்பழகனுடன் நேற்று நெடுநேரம் ஆலோசனை நடத்தினார் கருணாநிதி.
இதையடுத்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஸ்டாலினை கருணாநிதி நியமித்துள்ளார்.
ஏற்கனவே தா.கி. கொலையைத் தொடர்ந்து திமுக உட்கட்சித் தேர்தல்களில் ஸ்டாலின் கை ஓங்கிவிட்டது.
இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான நிர்வாகிகளும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இப்போது துணைப் பொதுச் செயலாளராக்கப்பட்டதன் மூலம் திமுகவின் அடுத்த தலைவர் என்றநிலையை ஸ்டாலின் நெருங்கிவிட்டார்.
அழகிரியா ஸ்டாலினா என்பதில் கருணாநிதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையும், ஸ்டாலின் தான் கட்சியில் தனதுவாரிசு என்பதையும் திமுகவினருக்கு கருணாநிதி தெளிவாக்கிவிட்டார்.
துணைப் பொதுச் செயலாளர் ஆசை காட்டப்பட்ட துரைமுருகனுக்கு, ஸ்டாலின் ஆலோசனைப்படி தலைமைக் கழகமுதன்மைச் செயலாளர் என்ற பதவி தரப்பட்டுள்ளது. இந்தப் பதவி துரைமுருகனுக்காக புதிதாகஉருவாக்கப்பட்டுள்ளது.
இது தவிர கருணாநிதி, முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, சுப்புலட்சுமிஜெகதீசன்ஸ ரகுமான்ரான், சுப. தங்கவேலன், பொன்முடி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டிஆறுமுகம் உள்ளிட்டவர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட திமுக செயல் திட்டக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கணக்கு வழக்குகளைக் கண்காணிக்கும் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக காசிநாதன், குழந்தைதமிழரசன், கல்யாண சுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசனின் பொறுப்பை சற்குணபாண்டியனுக்கும்,சுந்தரத்தின் பதவியை பரிதி இளம்வழுதிக்கும் தந்துள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications