தா.கி கொலை: கருணாநிதியை கைது செய்ய சு.சுவாமி கோரிக்கை
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க தலைவர் கருணநிதியிடமும் விசாரணை நடத்தவேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளமு.க.அழகிரியை காப்பாற்றுவதற்காக தி.மு.க. தலைவர் கருணநிதி போலீசாரின் புலன்விசாரணையை தடுக்க வழிவகைகளை தேடுகிறார். பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக பிரதமருக்குகடிதம் எழுதியுள்ளார்.
தா.கிருட்டிணனுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை, அவரை தனக்குப் பிடிக்கவில்லைஎன்று மு.க.அழகிரி தனது தந்தைக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளார். கொலை நடந்ததில் இருந்துதன்னை கைது செய்தது வரை கருணாநிதியுடன் 7 முறை மு.க.அழகிரி செல்போனில் பேசியபேச்சுகளை போலீசார் ரெக்கார்ட் செய்துள்ளனர்.
தா.கி. படுகொலையில், அழகிக்கு மட்டுமல்லாது, கருணாநிதிக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே அவரையும்கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அத்தோடு, வருமானத்திற்கு அதிகமாக அழகிரி சேர்த்துள்ளசொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
உத்திரபிரேசத்தில் மாயாவதி தலைமையிலான தாழ்த்தப்பட்ட அரசு இருப்பது பாரதீய ஜனதாவுக்குபிடிக்கவில்லை. இதனால் தான் அவருக்கு ஆதரவு தந்த அஜீத்சிங்கை , ஆர்.எஸ்,எஸ். தூண்டுதலின்பேரில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் இருந்து வெளிடேற்றிவிட்டது. மாயாவதி அரசை வீழ்த்தஅஜீத்சிங்கை பயன்படுத்தி வருகிறது பா.ஜ.க.
தாங்களே கவிழ்த்தால் எதிர்காலத்தில் தலித் ஓட்டுக்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அஜீத்சிங் மூலம் இந்த கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு அமைக்க வற்புறுத்துவதை சந்திரிகா ஏற்கமறுத்து விட்டார். இதனால் விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முறித்துவிட்டது என்று தான் அர்த்தம் என்றார் சுப்பிரமணிய சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications