மதுரை கமிஷ்னர் கந்தசாமி அதிரடி டிரான்ஸ்பர்
மதுரை:
மதுரை போலீஸ் கமிஷ்னராக இருந்த கந்தசாமி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜியாக இன்று காலை அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாகவிழுப்புரம் டி.ஐ.ஜி. விஜய்குமார் மதுரை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், விஜய்குமார் வரும் வரைபதவியில் நீடிக்க கந்தசாமிக்கு அவகாசம் தரப்படவில்லை.
உடனே, தனது பொறுப்புக்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜிய ரமேஷ் குடவாலாவிடம் ஒப்படைத்துவிட்டு விழுப்புரம்செல்லுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து தனது பொறுப்புக்களை அவர் ரமேஷ் குடவாலாவிடம் ஒப்படைத்துவிட்டு விழுப்புரம் கிளம்பினார்.விஜய்குமார் நாளை தனது மதுரை கமிஷ்னர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
தா.கிருட்டிணன் கொலையை அடுத்து திமுகவினர் மீது முதல்வர் ஜெயலலிதா விரும்பிய அளவுக்கு தீவிரமானநடவடிக்கைகளை இவர் எடுக்கவில்லை என்பதாலேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தா.கி கொலைநடந்தவுடன் அழகிரியைக் கைது செய்யவும் கந்தசாமி நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசியல் சண்டையில் சிக்க விரும்பாத அவர் ஆதாரங்கள் இல்லாமல் அழகிரியை கைது செய்ய முடியாது எனமறுத்ததாகத் தெரிகிறது.
மேலும் தா.கிருட்டிணன் கொலை நடந்தவுடன் இது தனிப்பட்ட விரோதம் காரணமான கொலையாகவும்இருக்கலாம் என்று கமிஷ்னர் கந்தசாமி பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தார். இதற்கு சென்னையில்இருந்து அவருக்கு டோஸ் கிடைத்தது.
இதையடுத்து இந்தக் கொலையை திமுகவினர் செய்தனர் என்று ஜெயா டிவிக்கு பேட்டியளிக்க நிர்பந்திக்கப்பட்டார்கந்தசாமி. இதைத் தொடர்ந்து அவ்வாறு பேட்டியும் தந்தார். இப்போது அதிரடியாக தூக்கப்பட்டுள்ளார்.
மதுரை போலீசில் அழகிரிக்கு பல உளவாளிகள் இருப்பதாகவும் அவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கவும்கந்தசாமி தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரை காவல்துறையின் பல ரகசிய திட்டங்கள்,நடவடிக்கைகளைக் கூட அழகிரி முன் கூட்டியே தெரிந்து வைத்திருந்தாகவும் அதிமுகவினர் தரப்பில்கூறப்படுகிறது.
திருச்சி கமிஷ்னரும் மாற்றம்:
அதே போல திருச்சி கமிஷ்னர் அலெக்சாண்டர் மோகன் தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர்ராமநாதபுரம் டி.ஐ.ஜியாக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ராமநாதபுரம் டிஐஜி சுனில்குமார் சிங் திருச்சிகமிஷ்னராக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சுனில்குமாருக்கு மறுவாழ்வு தரப்பட்டுள்ளது.
இது தவிர 33 டி.எஸ்.பிக்களுக்கு அடிசனல் எஸ்.பியாக பதவி உயர்வும் தரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications