சொத்துக் குவிப்பு: காங்கேயம் வி.ஏ.ஓ வீட்டில் ரெய்டு
ஈரோடு:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேகரித்தது தொடர்பாக காங்கேயம் அருகே உள்ளபரஞ்சேர்வழி வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) நாகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடிசோதனை நடத்தினர். இதில் அவர் குவித்துள்ள சொத்துக்கள் தொடர்பான பல ஆவணங்கள் சிக்கின.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாகராஜ் இப் பதவியில் இருந்து வருகிறார். இவர் வருமானத்தை மீறிசொத்து சேகரித்திருப்பதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
அவர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு முறைப்படி ஈரோடு மாவட்ட முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் போலீஸார் அனுமதி பெற்றனர். ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ராஜாதலைமையில் தனிப்படையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ரூ.8 லட்சம் மதிப்புசொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்திப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இவரது மாத வருமானம் ரூ. 7,000க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பணியில் இருப்பவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேகரிப்பு தொடர்பாக புகார்கள்வந்தாலும் பெரிய அளவில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது தான் அரசுஊழியர்கள் பக்கமும் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications