ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்!
தேனி & ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையர்தேனய்யா, பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதே போல தேனி மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளராக இரண்டு ஆண்டுகளாகபணியாற்றிய சேதுராமலிங்கம் ஓய்வு பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சஸ்பண்ட்செய்யப்பட்டுள்ளார்.
தேனய்யா:
ராமநாதசுவாமி கோவிலின் இணை ஆணையராக இருந்த இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கியகோவில்களிலும் உயர் அதிகாரியாக இருந்துள்ளார்.
நேற்று இவர் பதவியிலிருந்து ஓய்வு பெற இருந்தார். இந் நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக சென்னையிலிருந்துவந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தேனய்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கான உத்தரவை அவரிடம் வழங்கினார்.
கடந்த1999ம் ஆண்டு கன்னியாகுமயில் இணை ஆணையராக தேனய்யா இருந்தபோது, அரசு விதித்திருந்த காலக்கெடுவுக்குள்,கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத காரணத்திற்காக தேனய்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக இந்து அறநிலையத்துறைவிளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும் இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பே விளக்கம் அளித்துவிட்டதாக தேனய்யா கூறியுள்ளார்.
கலெக்டர் பி.ஏ:
இதே போல தேனி கலெக்டரின் நேர்முக உதவியாளராக இருந்த சேதுராமலிங்கமும் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் 37 ஆண்டுகளாக பணியாற்றியவர் சேதுராமலிங்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேனிமாவட்ட கலெக்தரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இவர் பணி ஒய்வு பெற இருந்தார். சேதுராமலிங்கம் ஒய்வு பெற இருப்பதால் அலுவலகத்தில் இருந்த சகஊழியர்கள் மற்றும் அதிகார்கள் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், அரசிடம் இருந்து சேதுராமலிங்கத்துக்கு சஸ்பெண்ட் உத்தரவு வந்தது. இந்த உத்தரவைமாவட்ட கலெக்டர் அதுல் ஆனந்த் வழங்கி சேதுராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்தார்.
கொடைக்கானாலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் தாசில்தாராக பணியாற்றிய போது, பட்டா வழங்கியதில் முறை கேடுநடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக துறைவாரியான விசாரணை நடந்து வருகிறது.
இப்பிரச்சனை சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் அடிப்படையில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.
தவறு செய்த அதிகாரிகளை பதவியில் இருக்கும்போதே தண்டிக்காமல் ஓய்வு பெறும் நாளில் அரசுதண்டித்திருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்தஇருவருக்கும் ஓய்வூதியமும், ஓய்வு பெற்றதையடுத்து வர வேண்டிய பணமும் கிடைக்காது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications