எய்ட்ஸ் பெயரில் ஒரு மோசடி: வாலிபர்கள், பெண்களிடம் ரூ. 2.5 லட்சம் சுருட்டல்
சென்னை:
எய்ட்ஸ் பிரசாரத் திட்டம் என்ற பெயரில் ஏராளமானவர்களிடம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேலாகமோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
அப்பகுதி இளைஞர்கள், பெண்களை அணுகிய இவர் தமிழக அரசின் எய்ட்ஸ் பிரசாரத் திட்டத்தைதான் மேற்கொண்டு நடத்தவிருப்பதாகவும், இதில் சேருவோருக்கு அரசு வேலை வாய்ப்பில்முன்னுரிமை தரப்படும் என்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் வேலை கிடைக்கும் என்றும்கூறியுள்ளார்.
இதை நம்பிய பலரும் அவரது அறக்கட்டளையில் சேரவும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தில் சேரலும்முன் வந்தனர். அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார் ஜோதிலிங்கம்.
அரசு வேலைதான் கிடைக்கப்போகிறதே என்ற எண்ணத்தில் இளைஞர்களும், பெண்களும்பணத்தைக் கொடுத்துள்ளனர். இந் நிலையில் 5 மாதங்களாகியும், கூறியபடி பிரசாரத் திட்டம் எதுவும்ஆரம்பிக்கப்படாத காரணத்தால், ஜோதிலிங்கத்தை அணுகினர் பணம் கொடுத்தவர்கள்.
அப்போது அவர் சொன்ன பதில் அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சிலர்போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தான் ஜோதிலிங்கம் பெரிய பிராடு என்பது தெரியவந்தது. முதல்வர் ஜெயலலிதாவின்பெயரைக் கூறியும், தமிழக அரசின் திட்டம் என்று பொய் கூறியும், பண வசூலில் அவர் ஈடுபட்டஅவரை போலீஸார் கைது செய்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications