அண்ணாசாலையில் குடிசைவாசிகள் சாலைமறியல்: போக்குவரத்து பாதிப்பு
News
-Staff
By Staff
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள குடிசைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கைஎடுத்ததால், குடிசைவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அண்ணாசாலை, தர்ஹாவுக்குப் பின்புறம் ஏராளமான குடிசைகள் உள்ளன. இந்த இடம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது. இன்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர்.உடனடியாக வீடுகளைக் காலி செய்யுமாறு குடிசைவாசிகளுக்கு உத்தரவிட்டனர்.ஆனால், குடிசைகளைக் காலி செய்ய முடியாது என்று அவர்கள் மறுத்தற். இதைத் தொடர்ந்துபோலீஸாரின் உதவியுடன், குடிசைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிய்த்தெறிந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த குடிசைவாசிகள், அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாலை மறியல் செய்தகுடிசைவாசிகள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.