நெல்லையில் ஆட்டோ- லாரி மோதல்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கோவிலுக்குப் போய் விட்டு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லைபேட்டை அருகேவந்தபோது, சேரன் மாதேவியிலிருந்து வந்த லாரி, ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல்சென்றுவிட்டது.
இதில் ஆட்டோ அப்பளமாய் நசுங்கியது. இதில ஆட்டோவில் இருந்த நம்பியம்மாள் என்ற பெண்சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆட்டோ டிரைவர் மகேந்திரன், ஒரு பெண் ஆகியோர் இறந்தனர். இன்னொருவருக்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications