தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலங்கள் விரைவில் மூடல்?
சென்னை:
அரசுத் துறையில் வேலைக்கு ஆள் சேர்ப்பதையே நிறுத்திவிட்டதால் வேலைவாய்ப்புஅலுவலங்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெட்டிச் செலவை குறைக்கும்வகையில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூடிவிடலாமா என்று அரசு யோசித்து வருகிறது.
இப்போதைக்கு டாக்டர்கள், போலீஸார் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கு மட்டுமே தமிழக அரசுஆட்களைச் சேர்த்து வருகிறது. மற்ற துறைகளில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவரைக் கூட புதிதாகவேலைக்குச் சேர்க்கவில்லை.
டாக்டர்கள் வேலைக்கு எப்போதோ ஒருமுறை தான் ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். போலீஸ்வேலைக்கு காவல்துறையே போட்டிகள் நடத்தி உடல்ரீதியில் பலமுள்ளவர்களைச் சேர்த்துவருகிறது. இந் நிலையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் வேலை மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு இருந்து வந்தது.
ஆனால், இப்போது ஆசிரியர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அரசு கொண்டு வந்துவிட்டது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியிடம் ஏற்பட்டால், வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அந்த பட்டியலில் உள்ளவர்களுக்குஇன்டர்வியூ நடத்தி பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்களை தேர்வு செய்து வந்தனர்.
இந் நிலையில் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை புதிதாக ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அரசுஉதவி பெறும் பள்ளிகளில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து ஆசிரியர்களை நியமிக்கத் தடைவிதிப்பதாக அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் முதல் தேதியில் இருந்து ஏற்படும் காலியிடத்துக்கு யாரையும் நியமிக்கக் கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு எடுத்துள்ள இந்த முடிவு காரணமாக வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கு இனி வேலையேஇல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது.
எனவே, விரைவில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் உள்ள ரெக்கார்டுகளைகம்ப்யூட்டர்மயமாக்கிவிட்டு அந்த அலுவலகங்களை மூடிவிடலாமா என்றும் அரசு யோசித்துவருகிறது.
இனி புதிதாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய விரும்புபவர்கள் ஆன்-லைன்மூலமாக பதிவு செய்துவிடும் வசதியை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications