கொலை, கொள்ளை, வழிப்பறி: போலீஸ்காரர்களின் மகன்கள் கைது
![]() |
| கைதான ரெளடிகள் மகாராஜன், சரவணகுமார், சங்கர் |
சென்னை:
கோவில்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு 3 ரெளடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரும் போலீஸ்காரர்களின் மகன்களாவர்.
கோவில்பட்டியைச் சுற்றி நடந்து வந்த தொடர் கொள்ளைகளால் போலீசார் திகைத்துப்போயிருந்தனர். இரவில் வழிப்பறிகளும் அதிகரித்தவண்ணம் இருந்தன. அந்தப் பகுதி ரெளடிகளைஎல்லாம் பிடித்து உள்ளே போட்ட பின்னரும் கொலையும் கொள்ளை, வழிப்பறிகளும்குறையவில்லை.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சுமித் சரண் கண்காணிப்பில்கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் அருளப்பன், போலீஸ்காரர்களான ராஜ், செல்வம், வேலுச்சாமி,ராமசந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது,.
இந்தப் படையினர் அதிகாலை கோவில்பட்டி- சாலைப்புதூர் ரோட்டில் ஜீப்பில் ரோந்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த மூவர் போலீஸ் ஜீப்பைக் கண்டவுடன் ஓட ஆரம்பித்தனர்.இதையடுத்து போலீசாரும் விரட்டிச் சென்றனர். நிற்காவிட்டால் சுட்டுக் கொல்வேன் எனஇன்ஸ்பெக்டர் அருளப்பன் எச்சரித்தையடுத்து மூவரும் நின்றனர்.
அவர்களை அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு கோவில்பட்டி காவல் நிலையம் வந்திறங்கியபோலீஸ் டீம் கடும் விசாரணையை ஆரம்பித்தது.
இவர்களது பெயர் மகாராஜன் (வயது 21), சரவணகுமார் (வயது 23), சங்கர் (வயது20).
போலீசார் இவர்களை அடித்து உண்மைகளை வாங்கியபோது அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகாத்திருந்தது. இந்த மூன்று கொள்ளையர்களில் இருவர் போலீஸ்காரர்களின் மகன்கள் என்றுதெரியவந்தது.
இதில் மகாராஜனின் தந்தை கொம்பையா மாஞ்சோலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகஉள்ளார்.
சங்கரின் தந்தை சங்கையாபாண்டியன் கோவில்பட்டி போக்குவரத்துறையிலேயே தலைமைக்காவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியபோதெல்லாம் அதைதங்களது போலீஸ் தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்டு சென்னைக்குத் தப்பிச் சென்றுவிடுவார்களாம்.
பின்னர் ஊருக்கு வந்து கொலை, கொள்ளை, வழிப்பறிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து நாட்டுவெடி குண்டுகள், அரிவாள், கத்தி, வாள் ஆகியவற்றையும் போலீஸார்பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களின் முக்கிய கூட்டாளியான ராஜபாண்டியன், கொம்பையா ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications