சென்னையில் கிணற்றில் இறங்கிய 3 பேர் அடுத்தடுத்து பலி: விஷ வாயு தாக்கியது
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்தில், கிணற்றுக்குள் இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாகஇறந்தனர்.
அந்தக் கிணறு நீண்ட காலமாக உபயோகப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்தக் கிணற்றில் கிருஷ்ணமூர்த்திதண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தபோது கயிற்றில் இருந்து கழன்று வாளி உள்ளே விழுந்துவிட்டது. இதையடுத்துஅதை எடுக்க கிருஷ்ணமூர்த்தி உள்ளே இறங்கினார்.
அப்போது கிணற்றில் இருந்த விஷ வாயு அவரைத் தாக்கியது. இதனால் அவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார்.அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகக் கருதிய அவரது தம்பி குமரப்பன் உடனே கிணற்றில் இறங்கினார்.ஆனால், அவரும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்து நீரில் மூழ்கினார்.
இதையடுத்து வீடு கட்ட வந்த கொத்தனாரான ஜெகன்நாதன் என்பவர் இவர்களை மீட்க கிணற்றில் இறங்கினார்.அவரையும் விஷ வாயு தாக்கியது. அவரும் மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
அப்போது தான் கிணற்றில் விஷ வாயு இருப்பது தெரியவந்தது. இதனால் மேற்கொண்டு யாரும் கிணற்றில்இறங்கி இவர்களை மீட்க முன் வரவில்லை. உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது.அவர்களும் விரைந்து வந்தனர். உடனடியாக கிணற்றுக்குள் ஆக்சிஜனைச் செலுத்தினர்.
ஆனால், அதற்குள் மூவருமே இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களது உடல்களைத் தான் தீயணைப்புப்படையினரால் மீட்க முடிந்தது.
சில நிமிடங்களில் அடுத்தடுத்து இந்த மூன்று சாவுகளும் நடந்துவிட்டன. இச் சம்பவம் மடிப்பாக்கம் பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications