தமிழக வறட்சி நிவாரணத்துக்கு கூடுதல் நிதி கேட்ட ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்துக்கு கூடுதலாக நிதியும், அரிசியும் ஒதுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த்சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், முதல்வரைச் சந்தித்து 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார் ஜஸ்வந்த்சிங்.

அப்போது வறட்சி நிவாரண உதவியாக மத்திய அரசிடம் இரண்டு முறை விரிவான மனுக்கள் மூலம்,ரூ.3527 கோடி நிதியுதவியும், 14.5 லட்சம் டன் அரிசியும் கேட்டிருந்தோம். ஆனால், ரூ.332.12கோடி நிதியுதவியும், 3.5 லட்சம் டன் அரிசியும் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை அப்போதுஜஸ்வந்த் சிங்கிடம் ஜெயலலிதா சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பாக வறட்சி நிவாரணத்துக்கான உயர்நிலைக் குழுவின் தலைவரான துணைப் பிரதமர்அத்வானியிடம் பேசி தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெயலலிதாகோரினார்.

மேலும் சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாகுறையைப் போக்க மாநில அரசின்திட்டங்களுக்கு நிதி உதவி செய்யுமாறும் ஜெயலலிதா கேட்க, பரிசீலிப்பதாக ஜஸ்வந்த் சிங்உறுதியளித்தார்.

முன்னதாக ஜஸ்வந்த்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்திக்க ஜெயலலிதா தயாரானார், ஆனால்,மரபுகளை ஒதுக்கிய ஜஸ்வந்த், ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்திலேயே வந்து சந்தித்தார்.

இதையடுத்து ஜஸ்வந்த் சிங், தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த போது, அவரை வரவேற்க சுமார் ஐந்துநிமிடங்களுக்கு முன்பே லிப்ட் அருகே வந்து காத்திருந்தார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+