கள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கேரளாவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரசாத் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள்கிடைத்துள்ளன.

இந்த வழக்கில் அவரது கேர்ள் பிரண்ட் இந்திராவும், அவளது கார் டிரைவர் ஆனந்த் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் கொண்ட இந்திராவுக்கும், கல்லூரியில் படித்து வந்த பிரசாதுக்கும் அப்போதுஏற்பட்ட காதல் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. இந் நிலையில் கார் டிரைவர் ஆனந்துடனும்இந்திராவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரசாத்திடம் இருந்து இந்திரா ஒதுங்க முயல அதை பிரசாத் எதிர்க்க, அதைத் தொடர்ந்து ஆனந்த்தும்இந்திராவும் திட்டமிட்டு அவரைக் கொலை செய்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் நகராட்சிக் கவுன்சிலராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பிரமுகராகவும் இருந்தவர் பிரசாத் செபாஸ்டியன். இவர் கடந்த மே மாதம் 26ம் தேதி சென்னை வந்தார்.ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் உள்ள தனது சகோதரி ரீட்டா வீட்டில் தங்கினார். பின்னர் அன்றே, ஒருநண்பரை சந்திக்கப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

வெளியில் சென்ற அவர் நேராக கொட்டிவாக்கத்தில் உள்ள தனது கல்லூரித் தோழி இந்திராவின் வீட்டிற்குச்சென்றார். அன்று இரவு, இந்திராவின் வீட்டிலிருந்து சகோதரி வீட்டிற்குப் போன் செய்து, தான் இரவு வீடு திரும்பமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ரீட்டாவின் வீட்டுத் தொலைபேசியில் பேசுபவர்களின் எண்ணை அறியும் "காலர் ஐடி" வசதி இருந்ததால்,இந்திராவின் தொலைபேசி எண் அதில் பதிவாகிவிட்டது.

இந்த நிலையில் செபாஸ்டியன் வீடு திரும்பாததால், குழப்பமடைந்த ரீட்டா, கொல்லத்திற்குப் போன் செய்து அங்குஅவர் வந்தாரா என்று விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் வரவில்லை என்று கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து செபாஸ்டியனின் மனைவி சூசன், கொல்லம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதேபோலரீட்டாவின் கணவர் அமல்ராஜும் சென்னை போலீஸில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம்திருவாலங்காடு பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. அது பிரசாத் செபாஸ்டியனின்உடல் தான் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

மேலும் செபாஸ்டியனின் தோழி இந்திரா குறித்த சில தகவல்களும் கிடைத்துள்ளன.

கேரளத்தில் கல்லூரியில் படித்தபோது இந்திராவுக்கும் பிரசாத் செபாஸ்டியனுக்கும் காதல் அரும்பியது. பின்னர்அந்தக் காதல் முறிந்தது. இதையடுத்து இந்திரா நர்சிங் கோரஸ் முடித்துவிட்டு ஈரோட்டில் ஒரு மருத்துவமனையில்வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கும் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்ற மீன் ஏற்றுமதியாளருக்கும்திருமணம் நடந்தது.

இதையடுத்து இந்திரா சென்னை வந்துவிட்டார். சுரேஷ் குமார் தனது பிஸினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூக்சென்றுவிடுவது வழக்கம். இதனால் இந்திரா பெரும்பாலும் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியே தான் இருந்துவந்துள்ளார்.

அதே போல பிரசாத் செபாஸ்டியனும் கேரளத்திலேயே சூசன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து அரசியலிலும்இறங்கி கவுன்சிலராகிவிட்டார்.

ஆனாலும் பிரசாத்துக்கும் இந்திராவுக்கும் இடையே கள்ள உறவு தொடர்ந்துள்ளது. சென்னை வரும்போதெல்லாம்இந்திராவை பிரசாத் சந்திப்பதும், அப்போது இந்திராவின் கணவர் வெளியூர் சென்றுவிட்டால் இரவு அவர்வீட்டிலேயே பிரசாத் தங்குவதும் வழக்கமாம்.

இந் நிலையில் இந்திரா வீட்டுக்குச் சென்ற பிரசாத் திடீரென மாயமானார்.

பிரசாத்தின் சகோதரி வீட்டில் இருந்த தொலைபேசியில் காலர் ஐ.டியை வைத்து பிரசாத் எங்கிருந்து பேசினார்என்பதைக் கண்டுபிடித்த போலீசார் இந்திராவை மடக்கினர்.

அவரிடம் நடந்த விசாரணையில் தான் இந்தக் கொலையை, இந்திராவின் தூண்டுதலால் டிரைவர் ஆனந்தனும்அவரது கூட்டாளிகளும் செய்தது தெரியவந்தது.

பிரசாத்துடன் தொடர்பு வைத்திருந்த இந்திராவுக்கும் அவரது டிரைவர் ஆனந்துக்கும் கள்ளத் தொடர்புஏற்பட்டுள்ளது. இந்த ஆனந்தனும் கேரளத்தைச் சேர்ந்தவர் தான். தமிழ் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார்.அட்ரா சக்கை, மாப்பிள்ளைக் கவுண்டப் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் நடித்துக் கொண்ட சுரேஷ்குமார்-இந்திரா வீட்டில் கார் டிரைவராகவும் பணியாற்றி வந்தார். மேலும்வீட்டின் கணக்கு வழக்குகளையும் பார்த்து வந்துள்ளார். அப்போது தான் இந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஆனந்தன் கிடைத்தவுடன் பிரசாத் மீது இந்திராவுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதை அவர்வெளிக்காட்டியும் கூட பிரசாத் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. மேலும் தனது கள்ளக் காதலியைபிரசாத் வந்து சந்திப்பதை ஆனந்தும் விரும்பவில்லை.

இந் நிலையில் தனது வீட்டுக்கு வந்த பிரசாத்துக்கும் இந்திராவுக்கும் பிரச்சனை வந்துள்ளது. அப்போது அங்கிருந்தஆனந்தனும் பிரசாத்துடன் மோதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது நண்பர்களான அப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகியோரின் உதவியுடன் பிரசாத்தைஆனந்த் தீர்த்துக் கட்டியுள்ளார். பின்னர் திருவாலங்காடு பகுதியில் பிரசாத்தின் உடலை வீசிவிட்டு வந்துள்ளனர்.

முன்னதாக இந்திராவையும் ஆனந்தனையும் மடக்கிய போலீசார், பின்னர் அவர்களுக்கு உடந்தையாக இருந்தஅப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+