குழந்தையை வயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்த மணமாகாத தாய்
விருதுநகர்:
திருமணமாகலேயே தவறான உறவு மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தனது கைக்குழந்தையுடன் கோவில் கிணற்றில் குதித்தார். இதில் அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய்மீட்கப்பட்டுவிட்டார்.
இந் நிலையில் சமீபத்தில் இரண்டாவதாக அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தையை யாருக்காவதுவிற்க முயன்றார். ஆனால் விற்க முடியவில்லை.
இதையடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையை தனது வயிற்றில் கட்டிக் கொண்டு திருவண்ணாமலை சாலையில் உள்ளகாமாட்சி கோவிலின் கிணற்றில் குதித்தார்.
ஒரு பெண் கிணற்றுக்குள் குதிப்பதைப் பார்த்து பதைபதைத்த பொது மக்கள் ஓடி வந்தனர். உடனே போலீசாருக்கும்தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் பொது மக்களும் சேர்ந்து அந்தப் பெண்ணை கிணற்றுக்கு வெளியேகொண்டு வந்தனர்.
அரை மயக்கத்தில் இருந்த ராஜேஸ்வர், என் குழந்தை கிணத்துக்குள்ள கிடக்குது என்று கூற அதிர்ச்சியடைந்தபோலீசார் உடனே தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தந்தனர். கிணற்றில் ராஜேஸ்வரி குதித்தபோது வயிற்றில்கட்டப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை நழுவி தனியே தண்ணீருக்குள் விழுந்துள்ளது.
தீயணைப்புப் படையினர் கிணற்று நீரில் மூழ்கி அந்தக் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 30அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் இருந்து அவர்களால் குழந்தையின் பிணத்தைத் தான் மீட்க முடிந்தது.
இது தொடர்பாக ராஜேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
