அழகிரி கடையில் ரெய்ட்
மதுரை:
| நேற்று அழகிரியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் இன்று அவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடையிலும்சோதனை நடத்தினர்.பெரியார் பஸ் நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்சில் அழகிரிக்குப் பல கடைகள் உள்ளன. இதில் ஒன்றில் வீடியோகடையையும் இன்னொன்றில் தனது மனைவி பெயரில் காந்தி சில்க்ஸ் என்ற கடையையும் அழகிரியே நடத்திவருகிறார். |
இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் காந்தி சில்க்ஸ் கடைக்கு உதவி கமிஷ்னர் ஹேமா தலைமையில் ஒருபோலீஸ் படை வந்திறங்கியது. அவர்கள் கடையை சோதனையிட வாரண்ட் கொண்டு வந்திருந்தனர். இதையடுத்துகடை ஊழியர்கள் ஒதுங்கிக் கொள்ள சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அழகிரியின் வீடியோ கடையிலும் சோதனை நடக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே நேற்று தங்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போலீஸாருக்கு ஒன்றுமேகிடைக்கவில்லை என்று மு.க.அழகியிரின் மனைவி காந்தி கூறியுள்ளார். அழகிரி வீட்டில் மதுரை போலீஸார்நேற்று 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.
இது குறுத்து அழகிரியின் மனைவி காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேடுதல் வேட்டையில்போலீஸாருக்கு எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.
நானும், எனது உறவினர்களும் போலீஸாருக்கு ழு ஒத்துழைப்பு கொடுத்தோம். எனது பேரன் விளையாடும்வீடியோ கேம் அடங்கிய கேசட், எனக்கு என் கணவர் அன்புடன் கொடுத்த டைரி, 1972ம் ஆண்டு எனக்கும்,அழகிரிக்கும் நடந்த திருமண வீடியோ கேசட், டெலிபோன் எண்கள் அடங்கிய புத்தகம் ஆகியவற்றை மட்டுமேபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
போலீஸார் வரும்போது, செல்போன் ஒன்றைக் கையில் எடுத்து வந்தனர். அது எனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதுஎன்பதாக கையெழுத்துப் போடுமாறு கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன்.
பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எங்களது வீடியோ, ஜவுளிக் கடைகளிலும்ம் சோதனை போட வேண்டும்என்று போலீஸார் கூறினர். ஆனால் கோர்ட் உத்தரவு இருந்தால்தான் அதை அனுமதிக்க முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன் என்றார் காந்தி.
ஆனால், இதையும் மீறி இன்று கடைகளில் ரெய்ட் நடந்து வருகிறது.
0
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!













Click it and Unblock the Notifications