நாங்க எவ்ளோ ஒத்துமையா இருக்கோம் பாருங்க.. சோ.பா.- இளங்கோவன் கூட்டு அறிக்கை
சென்னை:
எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை, கருத்து வேறுபாடுகள்இல்லை. எனவே எங்களைப் போலவேதொண்டர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காங்கிரஸ் கட்சியை முன்னேற்ற வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர்கள் சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகிய இருவரும் ஒன்றாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர்களின் மோதல் உச்சகட்டத்தை எட்டியபோதெல்லாம் கட்சித் தலைமை இவர்களை டெல்லிக்கு அழைத்துகண்டித்து அனுப்பியது. இதனால் சில நாட்கள் மட்டும் அமைதியாக இருக்கும் இவர்கள் மீண்டும் மோதிக்கொண்டார்கள்.
இன்னும் நீரு பூத்த நெருப்பாக இவர்களது மோதல் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
இந் நிலையில் அடுத்த மாதம் 15ம் தேதி காமராஜரின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. அதில்சோனியாகாந்தி கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவை சிறப்பாக நடத்திக் கொடுக்கும் பொருட்டு,இப்போதைக்கு தங்களது மோதலை ஒதுக்கி வைத்து தொண்டர்களை ஒன்று சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனால் இருவரும் சேர்ந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:
ஜூலை 15ம் தேதி விழாவை மிகச் சிறந்த விழாவாக மாற்றும் பொறுப்பு தொண்டர்களுக்கு உள்ளது. அதைமறவாது சிறப்பாக பணியாற்றிட வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சத்யஜித் கெய்க்வாட் மாநிலம்முழுவதிலும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார்.
அந்த சுற்றுப் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்திட வேண்டும்.
நாங்கள் இருவரும் மிகவும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை, கருத்துவேறுபாடுகளும்இல்லை. எனவே எங்களைப் பார்த்து தொண்டர்களும் ஒற்றுமையாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைப் படித்துவிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் சிரிப்பைஅடக்க சிரமப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல...!!












Click it and Unblock the Notifications