நிதித்துறைச் செயலருக்கு ஜெ. கொடுத்த பரிசு
சென்னை:
| தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் விடுறையில் செல்வதால் அந்தப் பொறுப்பு ஜூனியர் அதிகாரியானநிதித்துறைச் செயலாளர் நாராயணனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலகத்தில் மூத்தஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முணுமுணுத்து வருகின்றனர். |
ஆனால் நாராயணனுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது, பிற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில்ஆச்சரியத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு ஆணையர் என்ற தகுதியில்தான் நாராயணன் இருக்கிறார், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் வேறு சிலஅதிகாரிகள்தான் இருக்கின்றனர். இந் நிலையில் அவர்களை ஓரம்கட்டிவிட்டு, தலைமைச் செயலாளர் பொறுப்பைநாராயணனிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நிதி நிலையைச் சரி செய்யும் ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு நாராயணம் பெரும் பக்கபலமாக இருந்துவருகிறார். மேலும் அரசு ஊழியர்களின் சலுகை பறிப்பு போன்ற மிகச் சிக்கலாக விவகாரங்களில் மிக ஸ்டிரிக்ட்அதிகாரியான நாராயணனின் உதவி ஜெயலலிதாவுக்கு ரொம்பவே உதவி வருகிறது.
அதே நேரத்தில் நேர்மைக்கும் மிகவும் பேர் போனவர். மத்திய நிதித்துறையின் செயலாளராக உளள இன்னொருதமிழக அதிகாரியான நாராயணனுக்கும் இந்த நாராயணனுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உண்டு.
இதனால் தான் தமிழகத்துக்கு கேட்ட நிதியை திட்டக் கமிஷன் மூலம் மத்திய அரசு வழங்கியதாகவும் தெரிகிறது.இது தவிர தமிழகத்துக்கு கூடுதலாக ரூ. 1,000 கோடி தரலாம் என நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் நாராயணன்வலியுறுத்தியுள்ளார்.
இதற்கும் தமிழக நிதித்துறைச் செயலாளர் நாராயணனின் முயற்சிகளே காரணம் என்று தெரிகிறது. ஜூனியர்அதிகாரியாக இருந்தாலும் மத்திய அரசைக் கையாள்வதில் நாராயணனின் செயல்பாடுகள் ஜெயலலிதாவைமிகவும் கவர்ந்துவிட்டது.
இது தவிர டெல்லியில் சமீபத்தில் நடந்த திட்டக் கமிஷன் கூட்டத்தில் தமிழகத்தில் நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாகஇருப்பதாக திட்டக் குழுத் துணைத் தலைவர் கே.சி.பந்த் பாராட்டினார். நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும்ஜெயலலிதாவைச் சந்தித்து தமிழகத்துக்கு தனது பாராட்டைத் தெவித்தார்.
| இந்தப் பாராட்டுக்கள் நதித்துறை செயலாளர் நாராயணனுக்கே உரியவை என்று அவர்களிடமே ஜெயலலிதாவெளிப்படையாகப் பாராட்டினார். |
ஜூன் 25ம் தேதி வரை தலைமைச் செயலாளர் பொறுப்பை கவனிப்பார் நாராயணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications