விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா கடும் நெருக்குதல்
கொழும்பு:
உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா நெருக்குதல்கொடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கோடி டெய்லர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு உடனடியாக இலஙகை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தமுன் வர வேண்டும். டோக்கியோவில் நடந்த மிக முக்கியமான நன்கொடையாளர் மாநாட்டில் புலிகள்பங்கேற்றிருக்க வேண்டும்.
மாநாட்டில் பங்கேற்குமாறு நாங்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும், ஜப்பானும், நார்வேயும் புலிகளைஎவ்வளவோ வலியுறுத்தினோம். ஆனால், புலிகள் பங்கேற்கவில்லை. ஆனால், அந்த மாநாடு மிகப் பெரும்வெற்றியைப் பெற்றுள்ளது.
மாநாட்டைத் தவிர்த்ததன் மூலம் மிகச் சிறந்த வாய்ப்பை புலிகள் இழந்துவிட்டனர். இடைக்கால நிர்வாகம்அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தைகளிலேயே புலிகள் கிளப்பலாம். இந்தக்கோரிக்கைக்காக பேச்சுவார்த்தையையே புறக்கணிப்பது சரியல்ல.
உடனே பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் திரும்ப வேண்டும் என்றார் டெய்லர்.
மீண்டும் போர் வரலாம்: சந்திரிகா கட்சி
முன்னதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரத்அமுனுகாமா நிருபர்களிடம் பேசுகையில், மீண்டும் இலங்கை போரை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்றார்.
அவர் கூறுகையில், போரைச் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். இனப்பிரச்சனையை ரணில் அரசு மேலும் சிக்கலாக்கிவிட்டதாக புலிகள் கூறுவதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்என்றார்.
அமெரிக்காவுக்கு புலிகள் கண்டனம்:
இரு தினங்களுக்கு முன் பு லிகள் வெளியிட்ட அறிக்கையில், நார்வே தொடங்கிய அமைதி முயற்சிகளைஅமெரிக்காவும் ஜப்பானும் சேர்ந்து குழப்ப முயல்வதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பலம் வாய்ந்த சில அன்னிய சக்திகள் இனப் பிரச்சனையில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த நினைக்கின்றன. இந்தஅன்னிய சக்திகளுக்கு ரணில் அரசு அதிக இடம் கொடுப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளனர். புலிகள் குறிப்பிட்டஅன்னிய சக்திகள் அமெரிக்காவும் ஜப்பானும் தான் என இலங்கை அரசியல் பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
ஜப்பானில் நடந்த நன்கொடையாளர் மாநாட்டில் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர்ரிச்சர்ட் ஆர்மிடேஜ் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். தங்களது பிள்ளைகளைக் கூடமனிதவெடிகுண்டுகளாக மாற்றுவதில் புலிகள் தான் முன்னோடிகள் என்றார்.
புலிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளநிலையில் தான், உடனே பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு புலிகளை அமெரிக்கா நெருக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications