For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழகிரி கடைகளில் ரெய்ட்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Alagiris wife Gandhiநேற்று அழகிரியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் இன்று அவருக்குச் சொந்தமான ஜவுளிக் கடையிலும்வீடியோ கடையிலும் சோதனை நடத்தினர்.

பெரியார் பஸ் நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்சில் அழகிரிக்குப் பல கடைகள் உள்ளன. இதில் ஒன்றில் ராயல்வீடியோஸ் என்ற வீடியோ கடையையும் இன்னொன்றில் தனது மனைவி பெயரில் காந்தி சில்க்ஸ் என்றகடையையும் அழகிரி நடத்தி வருகிறார். தினமும் மாலை நேரங்களில் தனது ஆதரவாளர்களோடு இங்கு வந்துநின்று அழகிரி தர்பார் நடத்துவார்.

இந் நிலையில் இன்று காலை 10 மணியளவில் காந்தி சில்க்ஸ் கடைக்கு உதவி கமிஷ்னர் ஹேமா தலைமையில் ஒருபோலீஸ் படை வந்திறங்கியது. அவர்கள் கடையை சோதனையிட வாரண்ட் கொண்டு வந்திருந்தனர். இதையடுத்துகடை ஊழியர்கள் ஒதுங்கிக் கொள்ள சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அழகிரியின் வீடியோ கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனைகள் நடப்பது குறித்து தகவல் அறிந்தவுடன் அழகிரியின் மனைவி காந்தியும் அவரது உறவினர்களும்திமுகவினரும் அங்கு வந்தனர். நீதிமன்ற அனுமதியில்லாமல் எப்படி சோதனை நடத்தலாம் என காந்தி கேள்விஎழுப்பினார். ஆனால், சோதனைக்கு உரிய ஆவணங்களும் காரணங்களும் இருப்பதாகக் கூறிய போலீசார்சோதனையைத் தொடர்ந்தனர்.

சோதனையின்போது அழகிரியின் மனைவி காந்தி மற்றும் அழகிரியின் வக்கீல்களும் உடன்இருந்தனர்.

இதற்கிடையே நேற்று தங்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, போலீஸாருக்கு ஒன்றுமேகிடைக்கவில்லை என்று மு.க.அழகியிரின் மனைவி காந்தி கூறியுள்ளார். அழகிரி வீட்டில் மதுரை போலீஸார்நேற்று 6 மணி நேரம் சோதனை நடத்தினர்.

Alagiriஇது குறுத்து அழகிரியின் மனைவி காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேடுதல் வேட்டையில்போலீஸாருக்கு எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. எதையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.

நானும், எனது உறவினர்களும் போலீஸாருக்கு ழு ஒத்துழைப்பு கொடுத்தோம். எனது பேரன் விளையாடும்வீடியோ கேம் அடங்கிய கேசட், எனக்கு என் கணவர் அன்புடன் கொடுத்த டைரி, 1972ம் ஆண்டு எனக்கும்,அழகிரிக்கும் நடந்த திருமண வீடியோ கேசட், டெலிபோன் எண்கள் அடங்கிய புத்தகம் ஆகியவற்றை மட்டுமேபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

போலீஸார் வரும்போது, செல்போன் ஒன்றைக் கையில் எடுத்து வந்தனர். அது எனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதுஎன்பதாக கையெழுத்துப் போடுமாறு கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எங்களது வீடியோ, ஜவுளிக் கடைகளிலும்ம் சோதனை போட வேண்டும்என்று போலீஸார் கூறினர். ஆனால் கோர்ட் உத்தரவு இருந்தால்தான் அதை அனுமதிக்க முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன் என்றார் காந்தி.

ஆனால், இதையும் மீறி இன்று கடைகளில் ரெய்ட் நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X