Vijay Ministers List: விஜய் அமைச்சரவை பட்டியல்.. செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் 9 பேர் பதவியேற்பு.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் தான் அவர்கள் யார்? யாருக்கெல்லாம் இன்று அமைச்சராகும் யோகம் உள்ளது? என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. இதையடுத்து கடந்த 5 நாட்களாக போராடி பிற கட்சிகளின் ஆதரவை பெற்று மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார். விஜய்க்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

vijay-ministers-list-tvk-vijay-s-new-cabinet-of-9-ministers-in-tamil-nadu-here-s-the-full-list

இதையடுத்து விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மை இருந்ததால் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய் உடன் இன்று முதற்கட்டமாக குறைந்தபட்சம் 8 பேர் வரை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

விஜய் உடன் இன்று பதவியேற்கும் 9 அமைச்சர்களின் விவரம் வருமாறு:

புஸ்ஸி ஆனந்த் - சென்னை தி நகர் எம்எல்ஏ
ஆதவ் அர்ஜூனா - சென்னை வில்லிவாக்கம் எம்எல்ஏ
கேஜி அருண் ராஜ் - திருச்செங்கோடு எம்எல்ஏ
செங்கோட்டையன் - கோபிச்செட்டி பாளையம் எம்எல்ஏ
பி வெங்கடரமணன் - மயிலாப்பூர் எம்எல்ஏ
சிடிஆர் நிர்மல் குமார் - திருப்பரங்குன்றம் எம்எல்ஏ
ராஜ்மோகன் - சென்னை எழும்பூர் எம்எல்ஏ
டிகே பிரபு - காரைக்குடி எம்எல்ஏ
எஸ் கீர்த்தனா - சிவகாசி எம்எல்ஏ

இவர்கள் 9 பேரும் விஜய் உடன் இன்று அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+