சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் முத்து சொன்ன விஷயம்! விஜயாவுக்கு அவமானம்! மீனா கேட்ட சரியான கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial May 12th episode update) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 12ஆம் தேதிக்கான எபிசோடில், ஸ்ருதி குடும்பத்தினர் செய்த செயலால் கோபமான விஜயா அவர்களிடம் சண்டை போடுகிறார். அதே நேரத்தில் மனோஜ் செய்த செயல் அவருக்கே இப்போ இனி பிரச்சனையாக வரப்போகிறது. மறுபக்கத்தில் முத்து மீனாவும் அண்ணாமலையிடம் முக்கியமான விஷயத்தை செல்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறக்கடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial today episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மனோஜ் தன்னுடைய ஷோரூமில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால் ரோகிணி அதை விரட்டுவதற்கு நான் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லியிருந்தார். அப்போது மனோஜ் இன்னைக்கு இரவு நீ என் கூட வந்து தங்கிக்கோ அந்த எலியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இதனால் ரோகிணி மனதிற்குள்ளே இது நல்ல பிளான் இதை வைத்து மனோஜை கவுத்து விடலாம் என்று சந்தோஷத்தில் அங்கே வந்திருந்தார்.

Siragadikka Aasai serial Vijay TV

ரோகிணி போட்ட பிளான்

ரோகிணியை பார்த்ததும் மனோஜ் எலியை பிடிக்க என்ன ஐடியா வச்சிருக்க என்று கேட்டதும், ரோகிணி ஒரு பூனையை கொண்டு வந்து விடுகிறார். அது எலியை பிடித்து விடும் என்று சொன்னதும் மனோஜ் நிம்மதியாகி ரோகிணியுடன் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் அப்பா அம்மா ரெண்டு பேரும் பிரிந்து இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு என்று சொல்ல, அதற்கு ரோகிணி நானும் உன்னை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுகிறேன் என்று எமோஷனல் ஆகவும் ரொமான்டிக்காகவும் பேச அதைக் கேட்டு மனோஜ் உருகி விடுகிறார்.

மறுபக்கத்தில் முத்து மீனா வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார். அண்ணாமலை உட்பட எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது முத்து மீனாவையும் அவருடைய அம்மாவையும் உட்கார வைத்து அவர்களுக்கு சாப்பாடு பரிமாறுகிறார். அதற்கு மீனாவின் அம்மா ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகுதான் நாங்க சாப்பிடுவோம் என்று சொல்ல அதெல்லாம் அந்த காலம் இப்போ அப்படி எல்லாம் யாரும் கிடையாது என்று முத்து சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

முத்து சொன்ன விஷயம்

பிறகு தாங்கள் புதுசாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் சேர்ந்து இருப்பது பற்றி அனைவருடமும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ஸ்வேதா தான் அங்க இங்கிலீஷ் டீச்சரா வருகிறார் என்று முத்து சொன்னதும் அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். கூடவே நீ கண்டிப்பா படிக்கணுமாடா நீ படிச்சிருவியா என்று கேட்க, முத்து இல்லப்பா இப்போ வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் ஆயிடுச்சு அதனால கண்டிப்பா படிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு சத்யா தனியாக மாடியில் நின்று கொண்டு இருக்க அவரிடம் மீனா என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர். அதற்கு சத்யா ரேகாவுக்கு அவருடைய அப்பாவின் மீது சந்தேகம் வந்ததாக சொல்கிறார். உடனே முத்து அவர் உன்கிட்ட எப்படி நடந்துக்கிறார் என்று விசாரிக்க அவர் என்கிட்ட இப்பவும் பழைய மாதிரி தான் நடந்துக்குறாரு. முக்கியமான பொறுப்புகளை என்கிட்ட தான் கொடுக்குறாரு என்று சொன்னதும் என்ன பிரச்சனை வந்தாலும் நாங்க இருக்கிறோம் பார்த்துக்கொள்ளலாம் என்று சத்யாவுக்கு முத்து ஆறுதல் சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

ஸ்ருதி வீட்டில் பிரச்சனை

அடுத்ததாக ஸ்ருதி வீட்டில் பார்ட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்ருதி அம்மா செய்து கொண்டிருக்கிறார். அதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் விஜயாவிடம் இதுபோல எல்லாம் நீங்க பார்ட்டிக்கு போனதே கிடையாதா? என்று கேட்க, நாங்க இப்படி எல்லாம் பங்க்ஷன் கொண்டாடினது கிடையாது. நாங்க பிறந்தநாள், கல்யாணம் அப்படித்தான் பார்ட்டிக்கு போயிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு ஸ்ருதியின் அப்பா அவருடைய நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து விஜயாவிற்கு கடுப்பாக இருக்கிறது. அப்போது வந்த ஒரு நபர் விஜயாவை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே இவங்கள பார்ப்பதற்கு மலையாள ஹீரோயின் போல இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டு விஜயா மேலும் கடுப்பாகிறார். பிறகு அந்த நபர் விஜயா பக்கத்தில் வந்து டான்ஸ் ஆடுகிறார்.

கோபத்தில் விஜயா

அப்போது ஸ்ருதி அம்மா என் சம்மந்தியும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க என்று விஜயாவையும் ஆட சொல்கிறார். விஜயா முதலில் என்னால முடியாது என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து கட்டாயப்படுத்த அதனால் கடுப்பான விஜயா கோபத்தில் நான் இங்க டான்ஸ் ஆடவா வந்திருக்கிறேன் என்று கத்துகிறார். உடனே மாடிக்கு போய் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ்க்கு போன் செய்து நான் உன்னோட ஷோரூமுக்கு வரேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+