சோ.பாகிருஷ்ணனை நீக்க காங்கிரஸ் தலைமை முடிவு
டெல்லி:
தமிழக காஙகிரஸ் தலைவர் சோ.பாலகிருஷண்னனை நீக்கிவிட கட்சி மேலிடம் முடிவு செய்துவிட்டதாகத்தெரிகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்த பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைவர்களைக் கொண்ட குழுவைதமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கமல் நாத் நியமித்தார். வழிகாட்டுக் குழு என்ற பெயர் கொண்ட கோஷ்டித்தலைவர்களின் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய அனைவருமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தலைவர்கள் (சோ.பாலகிருஷ்ணன் மற்றும்செயல் தலைவர் இளங்கோவன்) இருப்பதை விரும்பவில்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.
மேலும் கட்சி விவகாரங்களில் தொடர்ந்து இந்த இருவரும் மோதி வருவதும், வெளிப்படையாகவே ஒருவரைஒருவர் தாக்கிக் கொள்வதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எரிச்சலூட்டியுள்ளது.
இதையடுத்து கட்சித் தலைமையில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் தலைவர் ப.சிதம்பரத்தை கட்சிக்குள் இழுத்து தலைமைப் பதவி தரவும் சோனியா முன்வந்தார். ஆனால், பா.சி. அதைத் தட்டிக் கழித்து வருகிறார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சமாளிக்கும் வகையில் காங்கிரஸ் பெண் தலைவர்களில்முக்கியமானவரான ஜெயந்தி நடராஜனை தலைவராக்கலாமா என்றும் சோனியா யோசித்து வருவதாகத்தெரிகிறது.
யாரை நியமிப்பது என்பதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், சோ.பாவை நீக்குவது என்றமுடிவுக்கு காங்கிரஸ் கட்சித் தலைமை வந்துவிட்டதாகத் தெரிகிறது.
கட்சிக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர், பரபரப்பு அரசியல் நடத்தி வருபவர் என்பதால் செயல் தலைவர்இளங்கோவனை பதவியில் வைத்திருக்கவும் சோனியா முடிவு செய்துள்ளார்.
ஆனால், மிக நிதானமாகப் பேசும் சோ.பாலகிருஷ்ணனுக்கு கட்சியிலும் ஆதரவில்லை. பரபரப்பு எதையும்உருவாக்கவும் அவருக்குத் திறமையில்லை என்பது தான் அவரை நீக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதற்குக்காரணமாகும்.
சோ.பா. நீக்கத்தை எப்படியாவது தடுக்கும் முயற்சிகளில் காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர்களில் ஒருவரானவாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனாலும் சோ.பா. நீக்கம் உறுதி என்றே தெரிகிறது.
புதிய தலைவரை இறுதி செய்துவிட்டு கமல்நாத் அடுத்த வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அடுத்த வாரத்தில்காங்கிரஸ் கட்சியில் பல பரபரப்புகள் காத்திருக்கின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications