சாரல் மழையில் குதூகலிக்கும் சுற்றுலா பயணிகள்
தென்காசி:
குற்றாலத்தில் சீசன் தாமதமாக மீண்டும் தொடங்கியுள்ளது. இரு தினங்களாக அங்கு சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகளின் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
"தென்னிந்தியாவின் ஸ்பா" என்று வர்ணிக்கப்படும், அருவிகள் நகரமான குற்றாலத்தில் எப்போதும் ஜூன் 1ம் தேதிசீசன் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு 10 நாட்களுக்கு மேல் மழை தள்ளிப் போனதால் சீசனும் தள்ளிப்போனது.
இந் நிலையில் கேரளாவில் தென் மேற்கு பருவ மழை வலுத்து வருவதால், குற்றாலத்தில் சாரல் மழைதொடங்கியுள்ளது.
இரு தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளிலும் தண்ணீர் வடியத்தொடங்கியுள்ளது. இன்னும் சில நிாட்களில் அருவிகளில் அதிக அளவில் தண்ணீர் கொட்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் சீசன் தொடங்கி விட்டது. எனவே சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் அங்கு குவிந்து, ரம்மியான சூழ்நலையை அனுபவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:
இதற்கிடையே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யும் வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெவித்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை காரணமாக லேசாக மழை பெய்து வருகிறது. கேரளத்தை ஒட்டிய கோவை, கன்னியாகுமரிமாவட்டங்களில் மட்டுமே நல்ல மழை பெய்து வருகிறது.
அதே நேரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தான் தமிழகம் முழுவதும் நல்ல மழைபெய்யும் என்று புனேவில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தென் மேற்கு பருவ மழையால் தமிழகத்துக்குப் பயனில்லை. மிகவும் குறைந்த அளவேமழை பெய்துள்ளது. அதேபோல கேரளாவிலும் இயல்பான மழை இல்லை, குறைந்த அளவேஅங்கும் மழை பெய்துள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.ஒரு ஆண்டில் தமிழகத்திற்குக் கிடைக்கும் பருவ மழையில், 30 சதவீத மழைப் பொழிவு இந்த இருமாதங்களில் இருக்கும் என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, வால்பாறையில் அதிகபட்சமாக 2 செ.மீ. மழையும், திண்டுக்கல்லில் 1 செ.மீ. மழையும்பதிவாகியுள்ளது. சென்னை நகரில் தொடர்ந்து 2 வது நாளாக மேகமூட்டம் நிலவுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications