போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி கிணற்றில் விழுந்த பெண்
சேலம்:
கள்ளச் சாராய வேட்டையின்போது போலீஸார் கெடுபிடியாக நடந்து கொண்டதால் அவர்களிடமிருந்துதப்புவதற்காக ஓடிய பெண், கால் தடுக்கி கிணற்றுக்குள் விழுந்தார்.
சேலம், பள்ளிகொண்டபுரி என்ற இடத்தில் மாத்து என்பவர் தனது வீட்டில் முன்பு கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றுவந்தார். இதையடுத்து காக்கபாளையம் போலீஸார் மாத்து, அவரது மனைவி மாதம்மாள், மகள் சரஸ்வதி (வயது19) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
ஆனால், சில நாட்களுக்கு முன் அவர்கள் மீண்டும் கள்ளச் சாராயம் விற்க ஆரம்பித்தனர். இதையடுத்து போலீஸார்அங்கு விரைந்தனர். மாத்து குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
ஆனால் தாங்கள் சாராயமே காய்ச்சவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளனர் மாத்துவும், மாதம்மாளும்.ஆனால் போலீஸார் வலுக்கட்டாயமாக அவர்களை ஜீப்பில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது அவர்களிடமிருந்துசரஸ்வதி தப்பி ஓடினார்.
அவரை போலீஸார் துரத்தினர். இந்த சமயத்தில், சரஸ்வதி, கிணற்றில் தவறி விழுந்தார். மகள் கிணற்றில்விழுந்ததைப் பார்த்துப் பதறிய மாத்து ஜீப்பிலிருந்து இறங்கி வந்து கிணற்றில் குதித்தார்.
இதையடுத்து சேலம் உருக்காலை தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்துசரஸ்வதியையும், மாத்துவையும் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தனர்.
சரஸ்வதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகபோலீஸார் தெவித்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications