கருணாநிதி புகாருக்கு அப்பல்லோ மருத்துவமனை மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு தவறான சிகிச்சைஅளிக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருப்பதற்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகஇயக்குநர் டாக்டர் பிரசாத் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தசெய்தியாளர்கள் கூட்டத்தில் தாங்கள் பேசியது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் முரசொலி மாறன் சேர்க்கப்பட்டு அவருக்கு தங்களது குடும்பத்தினரின்ஒப்புதலோடு அறுவைச் சிகிச்சை நடந்தது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 9வது நாளே அவர் எழுந்து உட்கார்ந்தார், நடந்தார், தானாகவே சாப்பிட்டார்.இவை அத்தனையையும் மாறனின் குடும்பத்தினரே உடன் இருந்து பார்த்துள்ளனர்.

ஆனால், அவரது உடல் உறுப்புகளில் இருந்த தொற்று அதிகமான காரணத்தால்தான் அவரது உடல் நிலைமோசமடைந்தது. இருப்பினும் செயற்கை சுவாசத்தின் முலம் அவரது நிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

உண்மை நிலை இப்படியிருக்க கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவத் துறையில் இருந்து வரும் ஒரு நிறுவனத்தை, 60லட்சம் பேருக்கு மேல் சிகிச்சை அளித்திருக்கும் மருத்துவமனை தவறு செய்து விட்டதாக தாங்கள் குற்றம்சாட்டியிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாக டாக்டர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.

இதற்கிடையே மாறனுக்கு அப்பல்லோவிலும், டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகமருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பிரதமர்வாஜ்பாய்க்கு கருணாநிதி கடிதம் அனுப்பிவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+