தர்மபுரி காலரா சாவு 12 ஆனது: 8 சிறுவர்கள் சேலம் மருத்துவமனைக்கு மாற்றம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பரவியுள்ள காலராவுக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி, கம்பைநல்லூர் உள்ளிட்ட 60 கிராமங்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பென்னையாற்றிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம், இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்தத் தண்ணீல் அசுத்தம் கலந்ததால், குடிநீர் கெட்டுப் போய் காலரா பரவியது. இதனால் வாந்தி, பேதியால் சுமார்1,200 பேர் பாதிக்கப்பட்டனர். முதலில் 33 கிராமங்களுக்குப் பரவிய காலரா பின்னர் 60 கிராமங்களுக்குப்பரவியது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையிலும், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அவசரமருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் வரை 6 பேர் இறந்திருந்தனர். நேற்று மேலும் 3 பேர்இறந்தனர். இன்று மேலும் ஒருவர் இறந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்ட 8 சிறுவர்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட கிராமங்களையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சித்திக் நேரில் பார்த்து வருகிறார்.
இதற்கிடையே, பெங்களூரிலிருந்து வெளியேறும் கழிவுகளால் தான் தென் பென்னையாற்று நீர் கெட்டுப் போய்விட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications