பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை இல்லை: அரசு மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பள்ளி பாடப் புத்தகங்களுக்கு பற்றாக்குறை இல்லை என்றும், தாராளமாக புத்தகங்கள்கிடைப்பாதகவும் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் கூறியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. பள்ளிகள் தொடங்கி பல வாரங்களாகியும்கூட இன்னும் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுள்ளது.

ஆனால், இதை அரசு பாடநூல் நிறுவனம் மறுக்கிறது.

இதுதொடர்பாக பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போதுமான புத்தகங்கள் இருப்பில்வைக்கப்பட்டுள்ளன. பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த கல்வியாண்டுக்கான அனைத்துப் பாடப்புத்தகங்களும் போதிய அளவுக்கு அச்சிடப்பட்டு, மாநிலத்தில் உள்ள 21 வினியோக மையங்களுக்கும்அனுப்பப்பட்டு விட்டன.

இந்த ஆண்டு 512 லட்சம் இலவச பிரதிகள் அச்சிடப்பட்டன. கடந்த ஆண்டு 506 லட்சம் பிரதிகள்வினியோகிக்கப்பட்டன. அதேபோல, விற்பனைக்கான பிரதிகளும் கூடுதலாகவே அச்சிடப்பட்டுள்ளன.

திருச்சி, கரூர், பெரம்பலூர் பகுதிகளில்தான் அதிக அளவில் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று புகார்கள்வருகின்றன. ஆனால் இந்தப் பிராந்தியத்திற்குத்தான் அதிக புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

இருப்பினும் தேவைப்பட்டால்கூடுதல் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில்தெவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+