சென்னையில் போர் பயிற்சி விமானம் விழுந்தது: 2 விமானிகள் உயிர் ஊசல்
சென்னை:
சென்னை அருகே போர்ப் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இரு விமானிகள் படுகாயங்களுடன்உயிர்த் தப்பியுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சென்யைை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் இந்த விபத்து நடந்தது. தாம்பரம் விமான தளத்தில் இந்த போர்ப்பயிற்சி விமானத்தில் (HPT trainer aircraft) ஸ்கூவாட்ரன் லீடர் வைத் மற்றும் இன்னொரு ஸ்கூவட்ரன் லீடர்நந்தேகர் ஆகிய இரு விமானப் படை அதிகாரிகளும் இன்று காலை பயிற்சிக்காகக் கிளம்பினர்.
சென்னையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்தவிமானம் திடீரென தரையை நோக்கிப் பாய்ந்தது. இங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் அருகே உள்ளகாய்ந்து கிடக்கும் ஒரு குளத்தில் மோதி வெடித்துச் சிதறியது.
இதில் இந்த இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். பயங்கர சப்தம் கேட்டு கல்லூரி மாணவர்கள் ஓடி வந்தனர்.இந் நிலையில் தகவல் அறிந்து விமானப் படையின் ஹெலிகாப்டரும் தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்துஉடனடியாக அங்கு விரைந்தது.
படுகாயத்துடன் கிடந்த இருவரையும் ஹெலிகாப்டர் மீட்டுச் சென்றது. அவர்கள் தாம்பரம் விமானப் படைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் தாம்பரம் விமான தளத்தில் இருந்து கிளம்பிய கிளைடர் விமானம் விழுந்து என்.சி.சி.மாணவியும் பயிற்சியாளரும் பலியானது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications