தமிழக பள்ளிகளில் இந்தி போதிக்க சொல்கிறது பா.ஜ.க
கடலூர்:
தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தி மொழியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கைவிடுத்துள்ளது.
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தி மொழியறிவு இல்லாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தேசிய அளவில் வேலை வாய்ப்பு,கல்வி கிடைப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
இந்தி மொழியை திராவிடக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வருவதால், தமிழர்களுக்குத்தான் அதிக பாதிப்புஏற்பட்டுள்ளது. வட இந்தியாவுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் மொழியறிவு இல்லாத காரணத்தால் மிகவும்தடுமாறுகிறார்கள். வடக்கே தமிழர்களுக்கு நல்ல வேலை கிடைப்பது அரிதாகி விட்டது.
இந்தி கற்றிருந்தால் அவர் அறிவாளி என்று கூறி விட முடியாதுதான். ஆனால் இந்தி தெரியாவிட்டால் ஏற்படும்பாதிப்பு தமிழ்நாட்டுக்குத்தான் என்பதை மறந்து விடக் கூடாது.
இந்தி மொழியைக் கற்பதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது உள்ளூர்மொழிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல, இந்தியை எதிர்த்து வருவதால், தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்துபார்க்க வேண்டும்.
ஆங்கிலத்தை சர்வதேசத் தொடர்பு மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் போல, இந்தியை, இந்தியாவின்தொடர்பு மொழியாக ஏற்க வேண்டும். இதில் தயக்கம் காட்டினால் தமிழ்நாடு மேலும் தனிமைப்படுத்தப்படும்அபாயம் உள்ளது என்றார்.
தமிழ் மொழிக்கு செம்மொழி (classical language) அந்தஸ்து பெற தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக மத்தியஅரசிடம் போராடி வருகிறது. சமஸ்கிருதத்துக்கு செம்மொழி அந்தஸ்து தந்துளள மத்திய அரசு, அதற்குஇணையான பழமையும் செழுமையும் கொண்ட தமிழைக் கண்டுகொள்ளவில்லை.
இந்தி விஷயத்தில் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழுக்குஇந்தியாவில் உரிய அந்தஸ்து கிடைக்கச் செய்யவும் குரல் கொடுப்பார்களா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications