இளங்கோவனை கைது செய்ய வேண்டியதுதானே?: ஜெவுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
எதற்கெடுத்தாலும் கைது, வழக்கு என்று பறக்கும் இந்த அரசு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதிகொடுப்பதில் நடந்த ஊழலை வெளிக் கொணர்ந்துள்ள காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீதுநடவடிக்கை எடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் முரசொலி பத்திரிக்கையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதிலில்,
கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், முறைகேடான வகையில்ஏராளமான ஆசியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை உயர்நீதிமன்றமே கண்டித்துள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்ட ஆசியர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற ஆயிரக்கணக்கானமாணவ, மாணவியர் இன்னும் கூட நீதி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இந் நிலையில் மீண்டும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பதில் லட்சம், லட்சமாய் லஞ்சம்வாங்கப்படுவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறிய புகாருக்கு மறுப்பு கூறாமல் மெளனம்சாதிப்பது ஏன்?
எதற்கெடுத்தாலும் வழக்கு, சிறை என்று ஆளாய்ப் பறக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் அவர் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டியதுதானே? கைது செய்ய வேண்டியதுதானே. அவர் மீது மான நஷ்ட வழக்குப் போட வேண்டியதுதானே?
அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் இளங்கோவன் மீது வழக்கு தொடரலாமே. உண்மைகள் வெளிவந்து இந்தஊழல் ராமயணத்துக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக் கூட முடித்துவிடலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications