மதுரை சிறையில் கொலையாளிகளை அடையாளம் காட்டிய சாட்சிகள்
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில், மதுரை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. அதில்கொலையாளிகள் இவர்கள் தான் என சாட்சிகள் அடையாளம் காட்டினர்.
இந்தக் கொலையை முதலில் யாரும் நேரில் பார்க்கவில்லை என்று தான் கூறப்பட்டது. ஆனால், நேரில் பார்த்தசாட்சிகளாக தா.கிருட்டிணனின் வீட்டு வேலைக்காரர் செல்வம், அருகில் உள்ள கல்யாண மண்டபத்தின் காவலாளிமற்றும் இருவரை போலீசார் வழக்கில் சேர்த்தனர்.
முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில் கொலையாளிகளை அடையாளம்காட்ட இவர்கள் நேற்று மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களை சிறை வளாகத்தில் மறைவிடத்தில் போலீசார் நிறுத்தினர். பின்னர் இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முபாரக் மந்திரி, மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா, இப்ராகிம் சுலைமான் சேட் மற்றும்இதில் சம்பந்தமே இல்லாத பிற கைதிகளையும் கலந்து அணி வகுப்பு நடத்த வைத்தனர்.
இதில் கொலையாளிகளாக இப்ராகிம் சுலைமான் சேட்டையும், முபாரக் மந்திரியையும் சாட்சிகள் அடையாளம்காட்டினர்.
இதையடுத்து சேட்டையும் முபாரக் மந்திரியையும் பிற கைதிகளுடன் மாற்றி மாற்றி கலந்து மீண்டும், மீண்டும்அணி வகுக்க வைத்தனர்.
அப்போதும் இந்த இருவரையும் சாட்சிகள் மீண்டும் தெளிவாக அடையாளம் காட்டினர்.
இதையடுத்து இந்த சாட்சிகள் மிக பலத்த பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் தா.கியின்வீட்டு வேலைக்காரர் செல்வத்தை நிருபர்களிடம் கூட போலீசார் காட்டவில்லை.
ஆனால், இந்த சாட்சிகளை போலீசாரே செட்டப் செய்துள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
முதலில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை என்று சொல்லிய போலீசார், சாட்சிகளை தாங்களோகவேஉருவாக்கி அவர்களுக்கு முபாரக் மந்திரி மற்றும் இப்ராகிம் சேட்டின் படஙகளையும் வீடியோக்களையும் காட்டி,பின்னர் அவர்களையே கொலையாளிகளாக அடையாளம் காட்ட வைத்துள்ளனர் என்கின்றனர் திமுகவினர்.
சாட்சிகளை போலீசார் தங்களது பாதுகாப்பிலேயே வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களது முழு விவரத்தையும்போலீசார் வெளியில் தெரிவிக்கவில்லை.
இநத் சாட்சிகளில் தா.கிருட்டிணனின் வீட்டு வேலைக்காரர் செல்வத்தின் பெயர் மட்டுமே வெளியில்தெரிந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications