காற்றில்லா டயர்களுடன் தரையிறங்கிய ஜெர்மன் விமானம்!
சென்னை:
காற்றழுத்தம் மிகக் குறைவாக இருந்த டயர்களுடன், சென்னைக்கு வந்த விமானம் பெரும் பரபரப்புக்கிடையேபத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பிராங்க்பர்ட் நகலிருந்து சென்னைக்கு லூப்தன்சா விமானம் நேற்று இரவு வந்தது. இரவு 11.45 மணிக்கு வரவேண்டிய விமானம், 11 மணிக்கே விமான நிலையத்தை அடைந்து விட்டது. இதைத் தொடர்ந்து தரைஇறங்குவதற்கான அனுமதிக்காக விமானம் வானில் சுற்றிக் கொண்டிருந்தது.
அப்போதுதான், விமானத்தின் டயர்களில் காற்றழுத்தம் மிகவும் குறைவாக இருப்பது விமானிகளுக்குத்தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தந்தனர் விமானிகள்.
உடனடியாக அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தீயணைப்பு வண்டிகள் ரன்வேயை ஒட்டிநிறுத்தப்பட்டன. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எமெர்ஜென்சி லேண்டிங்குக்கான அனைத்துமுன்னெச்சரிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டது. விமானிகளின் சாதுரியத்தால் விமானம் பத்திரமாகதரையிறங்கியது. அதன் பிறகுதான் விமான நிலைய அதிகாகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
டயர்களில் காற்றழுத்தம் குறைவாக உள்ள நிலையில் விமானத்தை தரையிறக்குவது மிகக் கடினமான,அபாயகரமான செயல் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் 325 பயணிகள் இருந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications