மாறனுக்கு பெங்களூரில் சிகிச்சை தர மத்திய அரசு திட்டம்
சென்னை:
அரிெக்காவில் ஹூஸ்டன் நகரில் மெதாடிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் முரசொலிமாறனுக்கு இதுவரை மத்திய அரசு ரூ. 10 கோடி செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் அவரது உடல் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லாததால் அவரை மீண்டும் இந்தியாகொண்டு வந்துவிடுவது குறித்து அவரது குடும்பத்தினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் ரூ. 2.25 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இந்தச்செலவுகள் குறித்து அதிமுக எம்.பிக்கள் மக்களைவையில் கேள்வி எழுப்பியதையடுத்து செலவாகும் பணத்தைத்தந்துவிடுவதாக மத்திய அரசிடம் மாறனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு மாறனுக்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைசெலவிடப்படுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் அவரை இந்தியா கொண்டு வந்துவிடலாம் என மத்திய அரசு யோசிக்கிறது.
ஆனால், டெல்லியிலும் சென்னையிலும் தரப்பட்ட சிகிச்சைகள் தவறானவை என்று திமுக தலைவர் கருணாநிதிகுற்றம் சாட்டி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதால் பெங்களூரில் உள்ள மல்லையா, மணிப்பால் ஆகியமருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் வைத்து சிகிச்சை அளிக்கலாமா என்று மாறனின் குடும்பத்தினருடன்நலத்துறை இணையமைச்சர் ராஜா மூலம் மத்திய அரசு பேசி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications