ஏட்டையா வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் ரெய்டு
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த ஏட்டைய்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவர் ரூ.15 லட்சம் அளவுக்கு சொத்து குவித்திருப்பது தெரியவந்தது.
திருச்சி மாவட்டம் லால்குடி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலாரக பணியாற்றுபவர் விசுவம். இவர் மீதுஅசோக்குமார் என்பவர் ஊழல் தடுப்புத் துறையில் புகார் செய்தார். எனது வேன் டிரைவரை ஜாமீனில் விடுவிக்கவிசுவம் ரூ. 1,000 லஞ்சம் கேட்டார்.
அத்தொகையை காவல் நிலையத்தின் அருகே உள்ள டீக்கடை உரிமையாளர் ஜிலானியிடம் கொடுக்கும்படிகூறினார் என்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் தெரிவித்தார் அசோக் குமார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் போலீசாரே ரூ. 1,000த்தை அசோக்குமாரிடம் கொடுத்து அதை ஜிலானியிடம் தரச்செய்தனர். அதை ஜீலானி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
ஜிலானி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தலைமைக் காவலர் விசுவமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விசுவத்தின் வீட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது ரூ. 8.50லட்சம் மதிப்புகு அவர் வங்கிகளிலும் ஷேர்களிலும் முதலீடு செய்திருப்பதும், அவரிடம் மாருதி கார், 2 மோட்டார்சைக்கிள்கள் இருப்பதும் தெரியவந்தது.
இவரது மாத வருமானம் ரூ. 7,000த்தைக் கூட தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏட்டையா சைடில் கையைநீட்டியே இவ்வளவு பணம் பார்த்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications