அதிமுகவினரை ஏமாற்றி ரூ. 34 லட்சம் மோசடி: தம்பதி தலைமறைவு
சிவகங்கை:
முதல்வர் ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறிக் கொண்டு அதிமுகவினரிடம் ரூ. 34 லட்சத்தைசுருட்டிக் கொண்டு கம்பி நீட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சிவகங்கையைச் சேர்ந்த அதிமுகவினர் 56 பேரிடம் இவ்வாறுமோசடி செய்துள்ளார். அதிமுகவினர் தவிர வேறு யாரையும் இவர் ஏமாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் விவரம்:
தன்னை ஜெயலலிதாவின் கலாச்சாரச் செயலாளர் என்று கூறி அதிமுகவினரிடம் நெருங்கினார் பாலகிருஷ்ணன்.2001ம் ஆண்டு முதலே போயஸ் தோட்டத்துக்கு மிக நெருக்கமானவராக இருப்பதாகக் கூறி ஜெயலலிதாவிடம்எடுத்த சில போட்டோக்களையும் காட்டியுள்ளார்.
இதில் அசந்து போன அதிமுகவினரை கட்சியில் பதவிகளைப் பிடிக்க இவரிடம் நெருங்கியுள்ளனர். அப்போதுஅவர்களிடம் நம்ம ஆட்சியில நீங்க ஏன் கஷ்டப்படனும், பேசாமா அரசு உத்தியோகத்துல சேர வேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.
அது முடியுமா என்று கேட்ட அதிமுகவினரிடம் மின் துறை, வீட்டு வசதித்துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை,தொழில்துறை முதலீட்டுக் கழகம் இதுல எல்லாம் நான் உங்களுக்கு வேலை வாங்கித் தர்றேன். ஆனா, கொஞ்சம்செலவாகும் என்று கூறியுள்ளார்.
அரசு வேலை கிடைக்கும் என்று நம்பிய அந்த அதிமுக தொண்டர்கள், இவரிடம் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம்வரை பணத்தைக் கொடுத்துள்ளனர். மொத்தம் ரூ. 33.5 லட்சம் வரை அதிமுகவினரிடம் இவர் வசூலித்தார்.
பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்காததால் சந்தேகப்பட்ட அதிமுகவினர்பாலகிருஷ்ணனைத் தேட அவர் தனது மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் தந்துள்ளனர். போலீசார் பாலகிருஷ்ணன், அவரது மனைவிஉள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலகிருணனையும் அவரது மனைவியையும் தேட சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications