தர்மபுரியைத் தொடர்ந்து சேலத்திலும் காலரா
சேலம்:
தர்மபுரியில் காலாராவால் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சேலத்திலும் இந்த நோய் பரவியுள்ளது.
சேலம் தாதம்பட்டி ஊராட்சியில் மலக்கழிவு கலந்த நீரைப் பருகிய 40 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி தென்பெண்ணையாற்றில் இருந்து வினியோகிக்கப்பட்ட குடிநீரில் அசுத்தம் கலந்ததால் 800 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 12 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சாவு எண்ணிக்கையை மறைக்க மாவட்ட நிர்வாகம் முயன்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந் நிலையில் சேலத்தில் தாதம்பட்டியில் உள்ள குடியிருப்புகளில் காலரா பரவியுள்ளது.
இங்கு பொது கிணற்றில் இருந்தும், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு மக்களுக்குவினியோகிகப்படுகிறது. இந்தக் கிணறுகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள திறந்தவெளியைத் தான் மலம்கழிக்கவும் பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழையில் மலக் கழிவு கிணற்று நீரில் கலந்துள்ளது. ஆனால், அந்த நீர் சுத்திகரிக்கப்படாமல்மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இந்த நீரைக் குடித்த சுமார் 40 பேருக்கு வாந்தியும், பேதியும் ஏற்பட்டது.இவர்களில் 19 பேர் பெண்கள்.
இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கக் கூட அரசு மருத்துவமனைகள் முன் வரவில்லை. வாந்தி, பேதியால்மயக்கமடைந்த பலர் மல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்குடாக்டர்கள் இல்லை என்ற பதில் கிடைத்தது.
இதையடுத்து பனமரத்துப்பட்டி சுகாதார நிலையத்துக்கு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவ சேவைக்கான நேரம்முடிந்துவிட்டதாக பதில் கிடைக்கவே, தாதம்பட்டி துணை சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டரிடம் புகார் தருவோம் என பொது மக்கள் மிரட்டிய பின்னர் சில நர்ஸ்கள் மருந்துகளை எடுத்துவந்து வீடுகளில் வினியோகித்துள்ளனர். இன்னும் இவர்களுக்கு உரிய சிகித்தை கிடைக்கவில்லை. வாந்திபேதியுடன் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
- தர்ம்புரி அருகே அசுத்த நீரால் காலரா: 5 பேர் பலி: 700 பேர்மருத்துவமனையில் அனுமதி
- தர்மபுரி அருகே வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு: மருத்துவக் குழுக்கள் விரைந்தன
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications