திருக்குறளின் மூல ஓலைச் சுவடிகள்: கண்டறிய கலாம் ஆர்வம்
சென்னை:
| 2000ம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருமான் தனது கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச் சுவடிகள்,இப்போது எங்கே, யார் வசம் உள்ளன என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார். |
|
அருங்காட்சியகங்கள் நாட்டின் கலாச்சார ஜன்னல்கள். இன்றைய வளர்ச்சிக்கு முந்தைய வரலாறு நமக்குஎப்படியெல்லாம் உதவியாக இருந்தது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை அருங்காட்சியகங்களுக்குஉண்டு. நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை உலகுக்கெல்லாம் பரப்ப வேண்டியது அருங்காட்சியகங்களின்பணியாகும்.
இந்த அருங்காட்சியகத்தை ரூ. 4.4 கோடி செலவில் புதுப்பித்த தமிழக அரசுக்கு என் பாராட்டுக்கள்.
2000ம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருமகன் தனது கைப்பட எழுதிய குறள்களின் மூல ஓலைச் சுவடிகள்கடைசியில் யார் வசம் போயின என்பது குறித்து ஆய்வு நடத்த தமிழாராய்ச்சியாளர்களும், அறிவியல்ஆராய்ச்சியாளர்களும் முன் வர வேண்டும். அவை கரையான்களுக்கு உணவாகியிருக்கலாம் என்று நண்பர்கள்கூறுகிறார்கள். ஆனாலும் அதைக் கண்டுபிடித்துவிட முடியும் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.
அந்த மூல ஓலைச் சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்.
மேலும் வள்ளுவரின் வாழ்க்கை குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வள்ளுவரின் முழுமையானவாழ்க்கை வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும்.
அனைத்து அருங்காட்சியகங்கள், புராதணக் கோவில்களிலும் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.சென்னை அருங்காட்சியத்தின் இன்டர்நெட் தளத்தை நேற்றிரவு இரண்டு மணி நேரம் பார்த்தேன். அட்டகாசமானவெப் சைட் இது. ஒரு நூலகத்தை 150 ஆண்டுகளாக இவ்வளவு சிறப்பாகப் பராமரித்து வருவது மிகவும்வியப்பான விஷயம் தான் என்றார் அவர்.
முன்னதாக அருங்காட்சியகத்தின் புதிய கலைக்கூடத்தையும், புதிய கட்டடங்களையும் கலாம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆளுனர் ராம் மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உற்சாக வரவேற்பு:
முன்னதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்றிரவு (புதன்கிழமை) சென்னை வந்தார். அவருக்கு மிகச் சிறந்தவரவேற்பளிக்கப்பட்டது.
2 நாள் பயணமாக சென்னை வந்த கலாமை விமான நிலையத்தில் ஆளுனர் ராம் மோகன் ராவ், முதல்வர்ஜெயலலிதா, மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் கலாம் ஆளுனர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் 6 நிகழ்ச்சிகளில்அவர் பங்கேற்கிறார்.
அவரது வருகையையொட்டி சென்னையிலும் காஞ்சிபுரத்திலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications