பன்னீர்- திருநாவுக்கரசர் கூட்டாக கிரானைட் பிசினஸ்: விதிகளை மீறிய லாரிகள் பறிமுதல்
தர்மபுரி:
விதிகளை மீறிய பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறைஅமைச்சர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு சொந்தமான கிரானைட் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர்.
தர்மபுரி ஆர்.டி.ஓ. அலுவக பிரேக் இன்ஸ்பெக்டர்கள் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையயில் வாகனசோதனை நடத்தினர்.
அப்போது, அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமாக கிரானைட் கற்கள் ஏற்றிவந்த இரண்டு லாரிகளைஅதிகாரிகள் நிறுத்தினர்.
அவை மதுரை, புதுக்கோட்டை மாவட்ட கிரானைட் குவாரிகளிலிருந்து கர்நாடகா மாநிலம் தும்கூருக்கு லோடுஎடுத்துச் சென்று கொண்டிருந்தன.
அதிக எடையை இறக்கினால் தான் லாரிகளை மேற்கொண்டு செல்ல அனுமதிப்போம் என அதிகாரிகள்தெரிவித்தனர். அப்போது தான் அதிகாரிகளின் காதில் லாரியில் வந்தவர்கள் சென்று இந்த லாரிகள் பனனீருக்கும்திருநாவுக்கரசருக்கும் சொந்தமானவை என்பதைத் தெரிவித்தனர்.
ஆனாலும் அதை ஏற்று லாரிகளை விட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அமைச்சர்களுக்கு லாரிகளில்வந்தவர்கள் தகவல் தர, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செய்தித்துறை அமைச்சர் அன்பழகன் (இவர்தர்மபுரிக்காரர்) ஆகியோர் மூலம் லாரிகளை விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு நெருக்குதல் வந்தது.
ஆனால், இதை ஆர்.டி.ஓ. சாரநாதனுக்கு அதிகாரிகள் தெரிவிக்க, இரு லாரிகளையும் கைப்பற்றி ஆர்.டி.ஓ.அலுவலகத்துக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுவிட்டார்.
இதையடுத்து இரு லாரிகளும் இப்போது தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
டி.என்.59-டி5951 என்ற பதிவு எண் கொண்ட லாரி மத்திய அமைச்சர் திருநாவுக்கரசருக்கு சொந்தமானது எனவும்,டி.என்.59-டி9394 என்ற எண் கொண்ட லாரி பொதுப் பணித்துறை அமைச்சரும் பன்னீர் செல்வத்துக்கும்சொந்தமானது என்று தெரிகிறது.
இரண்டு லாரி லோடு கற்களும் இந்த அமைச்சர்ளுக்கும் சொந்தமான குவாரிகளில் இருந்து தான் வெட்டி எடுத்துச்செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஒருவர் மத்திய அமைச்சர், இன்னொருவர் அம்மாவைக் கண்டால் பவ்யமாக ஒடுங்கும் மாநில அமைச்சர்.வெவ்வெறு கட்சிகளில் அரசியல் நடத்திக் கொண்டிருந்தாலும் இந்த இருவரும் சைடில் கூட்டாக கிரனைட்பிசினசை நடத்திக் கொண்டுள்ளனர் என்ற விவரம் லாரிகள் பிடிப்பட்டதால் தான் தெரியவந்துள்ளது.
அரசியலில் பெரிய அளவில் இடம் பிடிக்கும் முன் பெரியகுளத்தில் பன்னீர்செல்வம் டீக் கடை வைத்திருந்தவர்என்பது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications