காங்கிரசுக்குள் கலகம் மூட்டுகிறது அதிமுக: இளங்கோவன் புகார்
சென்னை:
சோ.பாலகிருஷ்ணனையும், என்னையும் பிரிக்க அதிமுக தூண்டுதலின்பேரில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலசக்திகள் சதி செய்து வருவதாக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோ.பாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை நாங்கள் தான் தலைவர்களாக நீடிப்போம்.
எனக்கும், சோ.பாவுக்கும் இடையே சண்டை என்று மேலிடத்தில் சொல்லியது இங்குள்ள சில காங்கிரஸ்தலைவர்கள்தான். அதிமுகவின் தூண்டுதலின்பேரில்தான் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த அதிமுக கைத்தடிகள் குறித்து கட்சி மேலிடத்தில் கூறியுள்ளோம். அவர்கள் மீது மேலிடம் உரிய நடவடிக்கைஎடுக்கும்.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மீது வருமான வரி ஏய்ப்பு, வருவாய்க்கு மிஞ்சிய சொத்து சேர்த்தது,பொருளாதாரக் குற்றம் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், பொருளாதாரக் குற்றம் ஏதும்தன் மீது இல்லை என ஜெயலலிதா ஊரை ஏமாற்ற முயல்கிறார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 43 ஆசியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டுஅனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் செம்மலை இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவர் மீது வழக்குத் தொடர்வேன்.
தமிழகத்தில் திமுக தான், கூட்டணிக்கு உகந்த கட்சி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்கூறியுள்ளார். அந்தக் கருத்தை மறுப்பதற்கில்லை என்றார் இளங்கோவன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications