மதுரை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் மீது லஞ்ச ஊழல் வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை முன்னாள் போலீஸ் கமிஷ்னரும் இப்போதைய டி.ஐ.ஜியுமான சூர்யபிரசாத் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ்விசாரணை நடந்து வருகிறகது.

சூர்யபிரசாத் மதுரையில் கமிஷ்னராக இருந்தபோது ரெளடிகள் கொட்டத்தை அடக்கினார். அதே நேரத்தில்அதிமுகவினரின் சிபாரிசுகளையும் ஒதுக்கித் தள்ளி வந்தார். நெசவாளர்களுக்கு ஆதரவாக திமுகவினர் கஞ்சித்தொட்டி விழா நடத்தியபோது அவர்களையும் அடித்து நொறுக்கினார்.

கொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணனை அப்போது மேடையிலேயே வைத்து அடித்தவர் சூர்ய பிரசாத். இதனால்கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் பிரிவினரின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்தார்.

இந் நிலையில் திடீரென மாற்றப்பட்டார். பதவி உயர்வு என்ற பெயரில் காவல்துறை தொழில்நுட்பப் பிரின் டி.ஐ.ஜி.என்ற டப்பா பதவியில் அமர்த்தப்பட்டார். இந் நிலையில் அவரது சொத்துக்கள் குறித்து உளவுப் பிரிவினர் ரகசியதகவல்களைத் திரட்ட ஆரம்பித்தனர்.

தனது வருமானத்தையும் மீறி அவர் கிட்டத்தட்ட சில கோடி அளவுக்கு சொத்துக் குவித்துள்ளதாகத் தெரியவந்தது.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரத்திலும் இவர் சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இப்போது போலீசார் சூர்யபிரசாத்மீது விசாரணை நடத்த ஆரம்பித்துள்ளனர். விரைவில் இவர் மீது வழக்குப் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் எம்.பி.ஏ. படிக்க அனுமதி கோரி அரசுக்கு இவர் கடிதம் எழுதியிருந்தார். அதை அரசு அனுமதிக்கஇருந்த நிலையில் இந்த லஞ்ச ஒழிப்பு விசாரணை ஆரம்பித்துள்ளது. இதனால் அவரது மேல் படிப்புக்கும் அனுமதிதரப்படவில்லை.

இதற்கிடையே மதுரை காவல்துறையின் உளவுப் பிரிவில் உதவி கமிஷ்னர் பொறுப்பு வகிக்கும் பட்டாபி மீதும்ஊழல் வழக்கு சுமத்தப்படும் என்று தெரிகிறது. இவரும் தனது வருமானத்தை மீறி பெருமளவில் சொத்துகுவித்துள்ளார் என்கின்றன லஞ்ச ஒழிப்புப் போலீஸ் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+