புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் வழக்கு: முக்கிய சாட்சி ஆஷா மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான நர்ஸ் சித்ராவின் தம்பி மனைவி ஆஷாமரணமடைந்தார். சில தினங்களுக்கு முன் ஆஷாவும் சித்ராவும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றனர். இதில் ஆஷா இப்போது இறந்துவிட்டார்,.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் பெண்களை வைத்தும், தன்னிடம் பணி புரிந்த நர்ஸ்களை வைத்தும், டிவிநடிகைகள், விபச்சாரிகளை வைத்துபம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அவற்றை இன்டர்நெட்மூலம் விற்பனை செய்து வந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் வீடியோவில் நடித்த பல பெண்களையும், ஆண்களையும் கைதுசெய்தனர்.

அவர்களில் முக்கியமானவர் நர்ஸ் சித்ரா. இவர் பல பெண்களை பிரகாஷிடம் அறிமுகப்படுத்தி புளு பிலிம்களில்நடிக்க வைத்துள்ளார். மேலும் பல தடவை சித்ராவே கேமராவையும் கையாண்டுள்ளார்.

இதனால் இந்த வழக்கில் சித்ரா முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் சித்ராவின் தம்பிஸ்டாலினின் மனைவி ஆஷாவும் புளு பிலிம்கள் எடுப்பதில் பிரகாஷுக்கு உதவியாக இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆஷாவும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந் நிலையில் போலீஸார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் இந்தப் பெண்களுக்குத் தொல்லை தந்து வந்ததாகத்தெரிகிறது. மேலும் ஸ்டசாலின் ஒரு கொலை வழக்கில் கைதானார்.

இதையடுத்து சித்ராவும் ஆஷாவும் சமீபத்தில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து புரசைவாக்கத்தில் உள்ள ஆயிஷா மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இதில் ஆஷா நேற்று மரணமடைந்தார்.

ஆஷாவின் சாவு, பிரகாஷ் வழக்கில் முக்கிய திருப்பு முனையாக அமையும் என்று தெரிகிறது. பிரகாஷ் வழக்கை 8வாரங்களில் முடிக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்தச் சூழ்நிலையில் முக்கிய சாட்சியான ஆஷாதற்கொலை செய்து கொண்டிருப்பது பிரகாசுகத்கு எதிராக சாட்சிகளை வலுப்படுத்துவதில் போலீசாருக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சித்ரா தொடர்ந்து மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் தனது மகளின் தறகொலைமுடிவுக்கு போலீசார் தந்த தொல்லை தான காரணம் என்று கூறு சித்ராவின் தாயார் மனித உரிமை கமிஷனிலும்புகார் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்த்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+