மரண தண்டனை ரத்து: சிங்கப்பூர் அதிபருக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
சென்னை:
சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு கருணை காட்டுமாறும்,மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டிஇன்டர்நேஷனல், அந் நாட்டு அதிபருக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண்பிரகாஷ் வைத்தியலிங்கம் என்ற 25 வயது இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றச்சென்றார். அங்கு அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞருடன் மோதல் ஏற்பட்டது.இதையடுத்தி திருச்சி வாலிபரை அருண்பிரகாஷ் கத்தியால் குத்திக் கொன்றார்.
இதைத் தொடர்ந்து அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதித்தது சிங்கப்பூர்நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து அருண் பிரகாஷின் பெற்றோர், சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு கருணை மனுஅனுப்பினர். அதில், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தனர்.
அதேபோல, குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கும் மனுக்கள்அனுப்பியிருந்தனர்.
இந் நிலையில், சிங்கப்பூல் உள்ள புலம் பெயர்ந்த தமிழ்ப் பணியாளர்கள் அமைப்பின் சார்பில்அருண்பிரகதாசுக்காக, உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகளுக்கும் ஒரு கோரிக்கைவைக்கப்பட்டது.
சிங்கப்பூர் அதிபர் நாதனுக்கு கருணை மனுவை அனுப்புமாறு அதில் தமிழப் பணியாளர் அமைப்புகோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் எஸ்.ஆர்.நாதனுக்குகோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
அதில், வாழும் உரிமையைத் தடுப்பதே மரண தண்டனை. எனவே அதை மாற்றி ஆயுள் தண்டனையாக அறிவித்துஇளைஞர் அருண் பிரகாஷை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications