அயோத்தி: சங்கராச்சாரியாருடன் வி.எச்.பி. மோதல்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

அயோத்திப் பிரச்சனைக்கு வரும் ஜூலை 6ம் தேதி அல்லது 7ம் தேதி புதிய தீர்வு ஏற்படும் என்று காஞ்சிசங்கராச்சாரியார் தெரிவித்தார். ஆனால், அது எப்படிப்பட்ட தீர்வு என்பதை அவர் விளக்க மறுத்துவிட்டார்.

இஸ்லாமிய சட்ட வாரியத்தின் 51 உறுப்பினர் கொண்ட செயற்குழு வரும் ஜூலைை 6ம் தேதி டெல்லியில்கூடுகிறது. இந்த வாரியத்தின் முக்கிய உறுப்பினர்களும் காஞ்சி சங்கராச்சாரியாரும் பல சுற்றுப் பேச்சுநடத்தியுள்ளனர். ஆனால். பேச்சு விவரங்களை அவர் வெளியிடவில்லை.

ஆனால், இஸ்லாமிய சட்ட வாரியத்திடம் ஒரு தீர்வுத் திட்டத்தை சங்கராச்சாரியார் முன் வைத்துள்ளதாகவும்,அதன்படி பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவது, அதன் மிக அருகிலேயே பாபர் மசூதியையும்திரும்பக் கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் மதுரா, வாரணாசி உள்ளிட்ட கோவில்களுக்கு அருகே உள்ள மசூதிகளை இடிக்கக் கோருவதைஇந்துக்கள் நிறுத்திக் கொள்வது என்றும் சமரசத் திட்டத்தை சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் இஸ்லாமிய சட்ட வாரியத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுக்கு உடன்பாடு உள்ளதாகவேகருதப்படுகிறது.

ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்றவை சங்கராச்சாரியாரின் இந்தத் திட்டத்தைஎதிர்த்து வருகின்றன. இதனால் சங்கராச்சாரியாரை நம்பி இஸ்லாமி சட்ட வாரியம் இந்த சமரசத் திட்டத்தைஏற்குமா என்று தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. தரப்பில் இருந்து இத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும்பட்சத்தில் சமரசத் திட்டத்தில்இருந்து இஸ்லாமிய சட்ட வாரியமும் பின் வாங்கலாம் என்று கருதப்படுகிறது.

வரும் ஜூலை 6ம் தேதி அயோத்தி விவகாரத்தில் மிக முக்கிய நாளாக இருக்கும் என்று தெரிகிறது.

தனது சமரத் திட்டம் குறிதது நேற்று காஞ்சிபுரத்தில் தன்னைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், ஜார்ஜ்பெர்னாண்டஸ் ஆகியோருடன் சங்கராச்சாரியார் விவாதித்தார். இஸ்லாமிய சட்ட வாரிய நிர்வாகிகள் தொடர்ந்துசங்கராச்சாரியாருடன் பேசி வருகின்றனர்.

இதற்கிடையே சங்கராச்சாரியின் தீர்வு பார்முலாவை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றுவிஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். இதில் எங்களை ஒதுக்கிவிட்டு மத்திய அரசும்சங்கராச்சாரியாரும் ஏதோ செய்து வருகின்றன. இந்த மறைமுகமான செயல்பாடுகளை மத்திய அரசுகைவிடாவிட்டால் தேசம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். எங்கள் பிணத்தின் மீது தான் எந்த சமரசத்திட்டத்தையும் அமலாக்க முடியும் என்றார்.

இந் நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கால் சென்னைக்கு ரகசிய விசிட்வந்துவிட்டுத் திரும்பியுள்ளார். சமீபகாலமாக பா.ஜ.கவுடன் நெருங்கி வரும் முக்கிய அரசியல் கட்சியின்தலைவரை அவர் சந்தித்து அயோத்தி குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.

வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். மூலம் தான் அந்த தமிழக முக்கியப் புள்ளி பா.ஜ.கவின் முக்கியத் தலைவருடன்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு நெருங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+