செஞ்சி ராமச்சந்திரன் மீது வழக்கு இல்லை: சிபிஐ பிடியில் இருந்து தப்பினார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வருமான வரித்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் லஞ்சம் பெறப்பட்டதில் செஞ்சி ராமச்சந்திரனுக்குத்தொடர்பிலலை என சிபிஐ தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு சிபிஐ வழங்கியுள்ள அறிக்கையில், ராமச்சந்திரனுக்கு இதில் நேரடியாக எந்தத் தொடர்பும்இல்லை. அவரது உதவியாளரான பாபு தான் இதில் புகுந்து விளையாடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் செஞ்சிக்கு மீண்டும் அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில்சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்த பின்னரே செஞ்சியாருக்கு நல்ல காலம் பிறக்கும் என்றுதெரிகிறது.

இப்போதுள்ள நிலவரப்படி பாபு, ஆடிட்டர் கிருஷ்ணசாமி, வருமான வரி அதிகாரி அனுராக் வர்தன் ஆகியோர்மீது மட்டுமே சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர் அதிகாரிஒருவர் தெரிவித்தார்.

இந் நிலையில் தனது மகனின் திருமண வேலைகளில் பிஸியாக உள்ள செஞ்சி ராமச்சந்திரன் இன்று டெல்லிசெல்கிறார். துணைப் பிரதமர் அத்வானி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸை அவர் சந்திக்கிறார்.

திருமணப் பத்திரிக்கையையும் தந்துவிட்டு தன் வழக்கு விவகாரம் குறித்தும் அவர் பேசுவார் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+