மத்திய அமைச்சர் முன் திமுகவினர் கட்டிப்புரண்டு சண்டை
அரியலூர்:
அரியலூர் அருகே செந்துறை என்ற இடத்தில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தின்போது, இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. மத்திய அமைச்சர் ராஜாமுன்னிலையில் திமுகவினர் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
பலர் மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட தூக்கிச் செல்லப்பட்டனர்.
அரியலூல் ஜூலை 3ம் தேதி கண்ணகி சிலை திறக்கப்படவுள்ளது. இதையொட்டி கட்சியின் மூத்த தலைவர்கள்வருகை தரவுள்ளனர். இந்த சிலை சிறப்பு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளரும், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சருமான ராஜா தலைமையில்கூட்டம் நடந்தது.
செந்துறை யூனியன் திமுக செயலாளர் செல்லக்கண்ணு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.
கூட்டம் தொடங்கியவுடன், ஞானமூர்த்தி என்பவரின் ஆதரவாளர்கள் எழுந்து, அரியலூர் மாவட்ட முன்னாள்திமுக செயலாளர் சிவசங்கர் குறித்து சில கருத்துக்களைக் கூறினார்.
அப்போது சிவசங்கர் தனது ஆதரவாளர்களோடு கூட்டத்திற்கு வந்தார். ஞானமூர்த்தி மற்றும் அவரதுஆதரவாளர்கள் கூறியதற்கு எதிர்ப்பு தெவித்து சிவசங்கர் ஆதரவாளர்கள் பேசினர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அடிதடிஉண்டானது. இரு கோஷ்டியினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர், இருக்கைகள் பறந்தன.
பலருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சமாதானம் செய்ய முயன்ற திமுகவினருக்கும் அடி, உதைவிழுந்தது.
அதிர்ச்சியடைந்த அமைச்சர் ராஜா, ஞானமூர்த்தி கோஷ்டியினரை உடனடியாக கூட்டத்தை விட்டு வெளியேறுமாறுஉத்தரவிட்டார்.
மண்டை உடைந்தவர்களை இரு தரப்பினரும் தூக்கிச் சென்றனர். ஞானமூர்த்தி கோஷ்டியினர் வெளியேறிய பிறகுகூட்டம் அமைதி திரும்பியது. இதன் பிறகு தொடர்ந்து நடந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications